அடேங்கப்பா...அட்சய திருதியையில் தமிழக மக்கள் வாங்கிய தங்கம் இவ்வளவா ?

May 11, 2024,05:10 PM IST

சென்னை:  அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தும் நகை பிரியர்கள் ஆர்வமாக தங்க நகைகளை வாங்கி உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


அதிர்ஷ்டம், புண்ணியம், லட்சுமி கடாட்சம் ஆகிய அனைத்தையும் குறைவின்றி அள்ளி தரக் கூடிய மிக முக்கியமான நாள் அட்சய திருதியை திருநாளாகும். வருடந்தோறும் சித்திரை மாதம் வளர்பிறையில், அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதியை அட்சய திருதியை நாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த நாளில் எதை செய்தாலும் அதன் பலன் பெருகிக் கொண்டே போகும் என்பது ஐதீகம். அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் தினம் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக நேற்று நகைக் கடைகளில் கூட்டம் அமோதியது. 




இந்த நன்னாளில் எப்படியாவது நகையை வாங்கி விட வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர் மக்கள். இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை நாளான நேற்று திருதியை திதி காலை 6.33 மணிக்கு தொடங்கி மே 11ம் தேதியான இன்று அதிகாலை 4.56 மணி வரை இருந்தது. நேற்று அட்சய திருதியை திருநாள் என்பதால் பெரும்பாலான நகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருந்தன. தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதினால், வெயிலுக்கு பயந்து காலையிலேயே நகை கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. நகை  வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கடைகளில் பழரசம், மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


அட்சய திருதியை முன்னிட்டு நேற்று மட்டும் 3 முறை நகை விலை உயர்ந்தது. நகை விலை உயர்ந்தாலும் , அதனை பொருட்படுத்தாது நகை கடைகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும்  24,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. கடந்த முறை அட்சய திருதியை நாளில் விற்ற தங்கத்தை விட, இந்த முறை விற்கப்பட்ட தங்கத்தின் அளவு அதிகமே. வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே அன்றைய விலைக்கே நகையை முன்பணம் கட்டி புக்கிங் செய்து வைத்ததால், தங்கம் விலை உயர்வு வாடிக்கையாளர்களை பெரும்பாளும் பாதிக்க வில்லை என்று தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் மட்டுமே ஒரே நாளில் 24,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது என்றால், இந்தியா முழுவதும் நேற்று எவ்வளவு தங்கம் விற்பனையாகி இருக்கும் என்பதை நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவை பொருத்தவரை வட மாநிலங்களில் தான் அட்சய திருதியை கொண்டாட்டம், தங்கம் வாங்குவது எல்லாம் மிகவும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்