சென்னை: பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறி போய் விட்டது.
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருவரையும் கீழ் நீதிமன்றம் விடுவித்தது. இருப்பினும் இந்த இருவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்து விசாரித்தது.
நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் சமீபத்தில் பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை, தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறி போய் விட்டது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிடவும் முடியாது.
இருவரும் அப்பீல் செய்வதற்கு வசதியாக 30 நாட்களுக்குத் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போன்ற வழக்குதான் பொன்முடி மீதான வழக்கும். முதல்வராக இருந்தபோதுதான் அவரும் இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அது திமுக தொடர்ந்த வழக்கு. இப்போது அதிமுக தொடர்ந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த பொன்முடி தண்டனைக்குள்ளாகி அமைச்சர் பதவியை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்முடிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}