டல்லாஸ்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் தனது மனைவி, 2 பிள்ளைகளுடன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியக் குடும்பம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து அதில் சிக்கி இந்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பத்தினர், அமெரிக்காவில் விடுமுறையைக் கழித்து வந்தனர். கடந்த வாரம் அட்லாண்டாவில் உள்ள உறவினர்களைச் சந்தித்த இவர்கள், டல்லாஸ் திரும்பிக் கொண்டிருந்தபோது இவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது.

கிரீன் கவுண்டி பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த மினி டிரக் ஒன்று இவர்கள் காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர மோதலில் கார் உடனடியாக தீப்பிடித்துக் கொண்டது. காருக்குள் சிக்கிக் கொண்ட நான்கு பேரும் வெளியே வர முடியாமல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானதால், உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டன. எனவே, தடயவியல் சோதனைக்காக எலும்புக்கூடு பாகங்களை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். டிஎன்ஏ மாதிரிகள் மூலம் இறந்தவர்களை அடையாளம் கண்ட பின்னரே உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில், குறிப்பாக டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர்கள் விபத்துகளில் சிக்குவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டல்லாஸ் அருகே நிகழ்ந்த பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், ஆர்யன் ரகுநாத் ஓரம்ப்பட்டி, ஃபாரூக் ஷேக், லோகேஷ் பாலச்சார்லா, தர்ஷினி வாசுதேவன் ஆகிய நான்கு இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் கார் பூலிங் செய்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த டிரக் ஒன்று இவர்களது எஸ்யூவி மீது மோதி தீப்பிடித்ததே விபத்துக்குக் காரணம்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெக்சாஸில் நடந்த மற்றொரு கார் விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினரும் அவர்களது மகளும் உயிரிழந்தனர். அவர்களது கார் மற்றொரு வாகனத்தால் மோதப்பட்டு தீப்பிடித்ததில், அவர்களது டீன் ஏஜ் மகன் மட்டும் உயிர் தப்பினார்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}