புதுடில்லி: குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரமாண்ட அளவில் ராணுவ அணிவகுப்புடன் குடியரசு தின விழா அணிவகுப்பு நடத்தப்பட்டது.
75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜ்பாத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
முன்னதாக போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு அவர் வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் தங்கர் வருகை தந்தார். அதன் பின்னர் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வந்தனர்.
அதன் பின்னர் விழா தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் பல்வேறு குழுக்கள் அணிவகுத்து வந்தனர்.
நாட்டின் பன்முக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள், மற்றும் ராணுவ பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. நாட்டின் சிறந்த ராணுவக் கட்டமைப்பை வெளிப்படுத்தும் வகையிலான ஊர்திகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் நாட்டின் பெண்களின் சக்தி மற்றும் ஜனநாயக கோட்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் செங்கோட்டை முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். செங்கோட்டை பகுதியை விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 70,000 அதிகமான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் முதன் முதலாக முப்படைகளில் உள்ள பெண் படை பிரிவினர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் வழக்கமாக இடம்பெறும் வாத்தியங்களுக்கு பதிலாக 100க்கு மேற்பட்ட பெண்களின் இந்திய இசை வாத்தியங்களை இசைக்க உள்ளனர். இந்திய விமான படையைச் சேர்ந்த பெண் விமானிகள் விமான சாகசங்களை நிகழ்த்துகின்றனர்.
இந்த அணிவகுப்பில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்று அணிவகுத்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினராக உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில்தான் இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்றுள்ளார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}