- சங்கமித்திரை
சென்னை: 800 திரைப்படம் ஒரு அழகான கதை. கிரிக்கெட் தெரியாதவர்கள், பார்க்காதவர்களையும் கூட இந்தப் படம் பார்க்க வைக்கும் என்று 800 படத்தின் இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி கூறியுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருந்த படம் இது. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளால் விஜய் சேதுபதி விலகிக் கொள்ளவே, மதுர் மிட்டல் நடிப்பில் இப்படம் உருவானது. முக்கிய வேடத்தில் மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் ஸ்ரீபதி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சில படங்களே திரைப்பட இயக்குநர்களுக்கு முழு திருப்தியைத் தரக்கூடியதாக இருக்கும். இதுபோன்ற படங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. தனது கனவுகளை நிலைநிறுத்த அனைத்து எல்லைகளையும் தாண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கு நான் பாக்கியம் செய்தவனாகவும் ஆசீர்வதித்தவனாகவும் உணர்கிறேன்.
முத்தையா முரளிதரன் சாரின் ஒரு சிறப்பு என்னவென்றால், அவர் கடல் கடந்தும் ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். அவர் களத்தில் ஒரு மந்திரவாதி. அவரது ஆட்டத்தை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். தவிர, அவரது பூர்வீகம் தமிழ்நாடு என்பதால், அவரை எப்போதும் தங்கள் 'மண்ணின் மகன்' என்றே ரசிகர்கள் கருதினர்.
முரளிதரன் சார் போன்ற ஒரு ஆளுமையை சந்தித்து அவருடன் நேரம் செலவிட்ட தருணங்களே எனக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. அத்தகைய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை உருவாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். '800' ஒரு அழகான கதையைக் கொண்டுள்ளது. இது கிரிக்கெட் பார்க்காதவர்களைக் கூட மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும்.
முத்தையா முரளிதரன் சாரின் வாழ்க்கை மிகவும் ஊக்கமளித்து, ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளத்திலும் ஆழமாகச் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. அதன் மூலம் அவர்களின் இலக்குகளை அடைய அவர்களைத் தூண்டுகிறது. மதுர் மிட்டல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஜிப்ரான், எடிட்டர் பிரவீன் கே.எல் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரும் இந்தத் படத்தை நிறைவேற்றுவதற்கு தூண்களாக இருந்துள்ளனர்" என்றார்
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 800 படம் அக்டோபர் 6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}