ஆன்மீகக் கதை.. ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா?

Feb 27, 2023,09:33 AM IST
ஒரு காலத்தில் ஒரு ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால் இன்று ஒரு ரூபாயில் என்ன கிடைக்கும்? என கேட்டால் கொஞ்சம் யோசித்து தான் பதிலை தேட வேண்டி இருக்கு. கடைகளில் ஏதாவது பொருள் வாங்கி விட்டு சில்லறை இல்லை என்றால் கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு சாக்லேட் தருவார். அவ்வளவு மட்டும். அதை விட்டால் ஒரு ரூபாய், தற்போதை நவீன காலத்தில் அரிதாகி விட்ட டெலிபோன் பூத்தில் ஒரு ரூபாயை வைத்து ஒரு போன் கால் செய்யலாம்.



அதையும் விட்டால் திருமணம் போன்ற விசேஷ வீடுகளில் தான் இந்த ஒரு ரூபாயின் பயன்பாட்டை அதிகம் பார்க்க முடியும். விசேஷங்களில் மொய் செய்பவர்கள் எவ்வளவு பெரிய தொகையை மொய் பணமாக வைத்தால் அதோடு ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்து 501, 1001, 10,0001 என்ற எண்ணிக்கையில் தான் மொய் வைப்பார்கள். ஆனால் ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்றால் நமக்கு சிரிப்பும், கேலியும் தான் செய்ய தோன்றும். ஆனால் இந்த கதையை படித்தால் இதற்கான விடை புரியும்.




மழலை மாறாத சிறுவன் ஒருவன் கடை தெருவில், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தான். கடையில் இருப்பவர்களிடம் ஏதோ கேட்கிறான். அவர்கள் இல்லை என்றதும் திரும்பி வருகிறான். அப்படி என்ன கேட்டிருப்பான் அவன் கடையில், எந்த பொருளை கடைக்காரர்கள் இல்லை என்கிறார்கள் ? அவனது கையில் இருந்தது ஒரு ரூபாய். அதை காட்டி, இந்த ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா? என்று தான் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். அனைவரும் அவனை விரட்டி அடித்தனர்.

கடைசியாக மகா கஞ்சனான ஒருவனின் கடைக்கும் சென்று இதையே கேட்டுள்ளான் சிறுவன். அந்த கஞ்சனோ கோபமாகி, சிறுவனை துரத்தவே துவங்கி விட்டார். அவனும் ஓடுகிறான். ஒரு காஸ்ட்லியான காரின் முன் அந்த சிறுவன் தவறி விழுந்து விடுகிறான். அந்த காரில் இருந்து இறங்கி வந்த ஒரு பெரும் பணக்காரர், " ஏனப்பா இப்படி ஓடி வருகிறாய்? அவர் ஏன் உன்னை துரத்துகிறார்? ஏதாவது பொருளை திருடி விட்டாயா?" என கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் ஒரு ரூபாய்க்கு இறைவனை கேட்டேன் அதற்காக தான் என்னை துரத்துகிறார் என்றான்.

இதை கேட்டு கொஞ்சம் குழப்பமான அந்த பணக்காரர், "சரி, ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கி என்ன செய்ய போகிறாய்?"என்றார். அதற்கு அந்த சிறுவன், இந்த உலகில் எனக்கு ஆதரவாக இருப்பது எனது தாய் மட்டும் தான். அவரும் உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் உள்ளார். அவரை குணப்படுத்த நிறைய பணம் வேண்டுமாம். எங்களிடம் வசதி இல்லை. அதனால் டாக்டர்கள் அனைவரும், உன் அம்மாவை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என கூறி விட்டனர். என்னிடம் இருப்பது இந்த ஒரு ரூபாய் தான். அதனால் தான் இந்த ஒரு ரூபாயை வைத்து இறைவனை வாங்கி எனது தாயை காப்பாற்றுவதற்காக எந்த கடையில் இறைவன் கிடைப்பார் என தேடிக் கொண்டிருக்கிறேன் என்றான் மழலை குரலில்.

இதைக் கேட்ட அந்த பணக்காரர், அந்த சிறுவனின் தாயின் மருத்துவ செலவிற்கு உதவி, அவர் உயிர் பிழைக்க உதவுகிறார். இதில் கடைசியாக அந்த சிறுவனின் நம்பிக்கையே வென்றுள்ளது. நெருக்கடியான சூழலில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் ஒவ்வொருவரும் இறைவனுக்கு சமமே. ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பார் என அப்பழுக்கற்ற தூய எண்ணத்துடன், ஒரு துளியும் சந்தேகம் இல்லாமல் அந்த சிறுவன் வைத்த நம்பிக்கையை தானே இறைவன் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பது? 

நீயே கதியென்று சரணடைந்து, நம்பிக்கையுடன் இறைவன் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, தூய அன்பு அது வாழ்வில் வெற்றியை மட்டுமே தரும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்