அஜித்தின் தந்தை காலமானார்.. "பிரைவசி"யை மதிக்கவும்..  குடும்பத்தினர் வேண்டுகோள்

Mar 24, 2023,10:52 AM IST
சென்னை : நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் உடல்நலக் குறைவாக காலமானார். தனது தந்தையின் இறுதிச்சடங்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அஜித், தனது ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

நடிகர் அஜித்தின் தந்தை, கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தால் அவர் உயிரிந்தார். அஜித்தின் தந்தை மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஜித்தின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.



இந்நிலையில் தனது தந்தையின் மறைவு பற்றி அஜித் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், எங்களது தந்தையான திரு.பி.சுப்ரமணியம் (85 வயது) பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்��த்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைப்பேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறுப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயத்தையும், இழப்பையும் புரிந்து கொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படிவேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

எடப்பாடி இரங்கல்

தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தந்தை பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

அண்ணாமலை 

அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார்  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்