செங்கோலுன்னு சொன்னாலே எரியுதே ஏன் ? .. கஸ்தூரி பளிச் கேள்வி!

May 27, 2023,11:14 AM IST
சென்னை: உயிர் போகும் பிரச்சினையையெல்லாம் விட்டுட்டு ஏன் செங்கோல் குறித்து விவாதம் பண்ணிட்டிருக்கோம் என்று கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

நடிகையாக வலம் வந்த கஸ்தூரி தற்போது சினிமாவில் நடிப்பதை விட சமூக வலைதளங்களில்தான் மிகவும் பிசியாக இருக்கிறார். பல்வேறு அரசியல் பிரச்சினைகள், நிகழ்வுகள், சமூக பிரச்சினைகள் குறித்து அனல் பறக்க கருத்துக்களைப் பதிவிடுவது வழக்கம்.



அவரது கருத்துக்கள் பெரும்பாலும் திராவிட எதிர்ப்பாக இருப்பது இயல்பானதா அல்லது திட்டமிட்டதா என்ற சர்ச்சை நீண்டகாலமாகவே ஓடி வருகிறது. பிரச்சினைகளின் அடிப்படையில்தான் தான் தனது கருத்துக்களைத் தெரிவிப்பதாக கஸ்தூரி கூறினாலும் கூட அவரது பெரும்பாலான கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் அல்லது விவாதத்தை கிளப்பும்.

கருத்துக்களோடு சேர்த்த ஊமக்குத்தாக நாலு குத்தும் குத்தி விட்டுப் போவது கஸ்தூரி ஸ்டைல். அந்தவகையில் இப்போதும் செங்கோல் குறித்து ஒரு கருத்தைத் குத்தியுள்ளார்.. "பேனா"வையும் லிங்க் செய்து!

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்:

உயிர் போகும் பிரச்சினைய விட்டுபுட்டு இந்த புண்ணாக்கை   விவாதிச்சுட்டு இருக்கோம். ஒரு வேளை அதான் task ஓ?  என்னை கேட்டா செங்கோலோ பேனாவோ,  எல்லாமே அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தம்பட்டம். மக்களுக்கு இதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்.

செங்கோல் உலகம் முழுக்க உண்டு.  ஆங்கிலேயர், ஆப்பிரிக்கர், ஆரியர், எல்லா மன்னரும் பயன்படுத்தினார்கள். தமிழரின் பிரத்தியேக அடையாளம்   இல்லை. அப்புறம் ஜனநாயகத்தில் மன்னராட்சி சின்னம் எதற்கு என்று கேட்டுள்ளார் கஸ்தூரி. 

இந்த டிவீட்டுக்கு அவர் கொடுத்துள்ள தலைப்பே.. செங்கோலைப் பத்திப் பேசினா.. ஓங்கோலுக்கு எரியுதே ஏன் என்பதுதான்.. இதுதான்  கஸ்தூரி ஸ்டைல்.. டக்குன்னு எங்க வச்சு லிங்க் பண்ணிருக்கார் பாருங்க.. வழக்கம் போல இந்த டிவீட்டுக்கும் வாதப் பிரதிவாதங்கள் களை கட்டி கலக்கிக் கொண்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!

news

அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு

news

ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!

news

ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி

news

உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

news

ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?

news

தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?

news

ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்