"ஒரு ராஜா ராணியுடன்".. சார்லஸ், கமீலாவின் முதல் அதிகாரப்பூர்வ போட்டோ ரிலீஸ்!

May 09, 2023,01:08 PM IST
லண்டன்: மன்னராக முடிசூடிக் கொண்ட பின்னர் சார்லஸ் தனது மனைவி ராணி கமீலாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரிட்டன் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

ராணி 2ம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து  பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் முடி சூடிக்கொண்டுள்ளார்.  மே 6ம் தேதி இவரது முடிசூட்டு விழா பக்கிங்காமில் நடந்தது. இந்த விழாவில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். சார்லஸுடன், அவரது மனைவி கமீலா ராணியாக முடி சூடப்பட்டார்.



இந்த நிலையில் முடி சூட்டு விழாவுக்குப் பின்னர் மன்னர் எடுத்துக் கொண்ட அதிகாரப்பூர்வ புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மன்னர் சார்லஸ் தனித்து அமர்ந்திருப்பது போலவும், ராணி கமீலாவுடன் ஜோடியாக நிற்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சார்லஸின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் இதை. ஹியூகோ பெர்னான்ட் என்ற புகைப்படக் கலைஞர் இதை எடுத்துள்ளார்.

சார்லஸ் போஸ் கொடுப்பதற்காக அமர்ந்துள்ள இருக்கைக்கும் ஒரு வரலாறு இருக்கிறதாம். 1902ம் ஆண்டு அப்போதைய அரசர் 7ம் எட்வர்டின் முடி சூட்டு விழாவின்போது, இளவரசர் 5ம் ஜார்ஜ் அமருவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த இருக்கை அது. அதில் அமர்ந்துதான் சார்லஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்லஸின் தலையை அலங்கரிக்கும் மகுடம் 1.06 கிலோ எடை கொண்டது. 31.5 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. இதில் 2868 வைரங்கள், 17 பவளங்கள், 11 எமரால்டுகள், 269 முத்துக்கள், 4 ரூபி  ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த மகுடத்தில் கல்லின் 2 வைரமும் உள்ளது. உலகில் கண்டுபிடிக்கப்பட்ட 2வது பெரிய வைரக் கல் இதுதானாம்.

புகைப்படத்துடன் மன்னர் சார்லஸ் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றையும் இணைத்துள்ளார். அனைவருக்கும் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும், இங்கிலாந்துக்காகவும், காமன்வெல்த் நாடுகளுக்காகவும் தான் அர்ப்பணிப்புடன் உழைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்