சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அதேசமயம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கின் உத்தரவு வரும் வரை முடிவை அறிவிக்க தடை விதித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான அவசர விசாரைண இன்று (மார்ச் 19) நடைபெற்றது. இதில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

நீதிபதி வந்ததும் வாதத்தை துவக்கிய ஓபிஎஸ் தரப்பு, அதிமுக பொதுச் செயலாளர் பதவி என்பது ஜெயலலிதா வகித்த பதவி. ஜெயலலிதாவின் பதவி யாருக்கும் கிடையாது என வாதத்தை முன் வைத்தது. ஓபிஎஸ் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் என கூறிவிட்டு இப்போது பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் எதற்காக நடத்துகிறீர்கள்? ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது, தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தில், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. அதிமுக.,வின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் செயல்படுகின்றனர். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலின் போதும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் தான் வேட்புமனு பெறப்பட்டன. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும் ஒற்றை தலைமையை தான் விரும்புகிறார்கள். ஓபிஎஸ் தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கற்பனை உலகத்தில் இருக்கிறார்கள். கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என கட்சி விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு தேர்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது. ஜூலை 11 ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் சட்ட விரோதமானவையல்ல. சூழ்நிலைகள் மாறியதால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பான விதிகள் இதற்கு முன் 2017 ல் திருத்தப்பட்டது. பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டது. இரட்டை தலைமையில் இருந்து ஒற்றை தலைமைக்கு மாறும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அடுத்த தேர்தலுக்கு முன் திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் கமிஷன் ஏற்காவிட்டால் வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்திட முடியாது என வாதிடப்பட்டது.
ஈபிஎஸ் தரப்பி பதிலை கேட்ட பிறகு, தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிடக் கூடாது. ஜூலை 11 ல் நடந்த அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் மார்ச் 24 ம் தேதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதுவரை பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
முயற்சி
திருவண்ணாமலை 2026 வசந்த உற்சவம் கோலாகலம்!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
{{comments.comment}}