நாக சைதன்யாவின் கஸ்டடி டிரைலர் எப்படி இருக்கு ?

May 06, 2023,01:31 PM IST
நடிகர் நாக சைதன்யா நடிப்பில், வெங்கட் பிரபு எழுதி, இயக்கிய உள்ள படம் கஸ்டடி. ஸ்ரீநிவாச சித்தூரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். கீர்த்தி ஷெட்டி, ப்ரியா மணி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ள இந்த படம் மே 12 ம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் கஸ்டடி படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள கஸ்டடி படத்தின் டிரைலர் எப்படி இருக்கு? படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா? படத்தின் கதை என்ன என்பது பற்றி இங்கு பார்ப்போம்.



கஸ்டடி படத்தில் புதிதாக வேலைக்���ு சேரும் போலீஸ் கான்ஸ்டபிளாக நாக சைதன்யா நடித்துள்ளார். அரசியல் செல்வாக்கு உள்ள ரெளடியாக அரவிந்த்சாமி நடித்துள்ளார். நாக சைதன்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். பெண் அரசியல் தலைவராக பிரியா மணி நடித்துள்ளார்.  த்ரில்லிங், அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பி உள்ளார் வெங்கட் பிரபு. மாநாடு படத்திற்கு போட்டியாக இன்னொரு படைப்பை உருவாக்கி உள்ளார் என்றோ சொல்லலாம்.

வழக்கம் போல் யுவன், இசையில் மிரட்டி உள்ளார். வில்லத்தனத்தில் அரவிந்த் மீண்டும் சாதித்துள்ளார். அவருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு திருப்பு முனையை தரும் என்றே சொல்லலாம். எல்லாற்றிற்கும் மேலாக ஹீரோ நாக சைதன்யா, போலீசாக வேற லெவலில் பட்டையை கிளப்பி உள்ளார். தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஆக்ஷன் ஹீரோவாக, கஸ்டடி படத்திற்கு பிறகு நாக சைதன்யா மாறி விடுவார் என்பதில் சந்தேகமில்லை. "நேர்மையின் பக்கம் நின்னு பார் வாழ்க்கையே மாறும்" என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு பெரிய பிளஸ்சாக இருக்கும் என்றே சொல்லலாம்.

அசத்தலாக ஆக்ஷன் காட்சிகள், ஷேசிங், த்ரில்லிங் என டிரைலரிலேயே படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டி உள்ளார் வெங்கட் பிரபு. நாக சைதன்யாவை தெலுங்கு ஹீரோ என்பதையே முற்றிலுமாக மறக்க செய்து விட்டார். கீர்த்தி ஷெட்டியை வெறும் காதல் காட்சிகள், பாடலுக்காக மட்டும் பயன்படுத்தாமல் நன்றாகவே நடிக்க வைத்துள்ளார் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாநாடு படத்திற்கு பிறகு அடுத்த மிரட்டலுக்கு வெங்கட் பிரபு தயாராகி விட்டார். கஸ்டடி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வாகை சூட போகிறதா அல்லது முடங்க போகிறதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்