அண்ணாமலை, ஜெயக்குமார் பற்றிய கேள்வி...தனது பாணியில் நச்சுன்னு பதில் கொடுத்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

Feb 03, 2023,02:48 PM IST
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ., திருமகன் ஈவேரா.,வின் திடீர் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 ம் தேதியன்று நடக்கும் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக.,வின் இபிஎஸ் அணி சார்பில் தென்னரசுவும், ஓபிஎஸ் அணி சார்பில் டி.செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 31 ம் தேதி துவங்கி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 07 ம் தேதி தான் கடைசி தேதியாகும். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன.

திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளரை அறிவிக்கும் முன்பாகவே காங்கிரஸ் கட்சியினரும், திமுக அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தை துவக்கி விட்டனர். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், எனது மகன் விட்டு சென்ற பணியை நிறைவேற்றுவதற்காக எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் என்பதை விட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் நான் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

அதிமுக.,வில் பிளவுபட்டிருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளை சேர்த்து வைக்கும் முயற்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை இறங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு தனக்கே உரிய ஸ்டைலில் பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்ணாமலை பெரிய மனிதர். அவரை பற்றி எல்லாம் நான் பேச முடியாது. நான் சிறிய ஆள். யார் சேர்வது பற்றியோ, பிரிவது பற்றியோ எனக்கு எந்த கவலையும் இல்லை என்றார்.

மேலும் இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் புதிதாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளது பற்றிய கேள்விக்கு போகிற போக்கில் பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், அவர் மீதே ஏகப்பட்ட புகார்கள் உள்ளது என பதிலளித்தார். அவரின் பதிலால் அப்பகுதியில் பெரிய சிரிப்பலை எழுந்தது.

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்