சிங்கப்பூர்ல குப்பை கொட்ட முடியாது.. ஆனா இங்கே தாராளமா போடலாம்!

Jul 10, 2023,11:13 AM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூர்ல பொது இடத்தில் குப்பை கொட்டுவது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் அங்கு ஒரு பொது இடத்தில் நீங்க குப்பை கொட்டாட்டி.. "சார் நீங்க ஏன் குப்பை கொட்டலை" என்று அன்போடு கேட்பார்கள்.. அட.. கேக்கவே ஆச்சரியமா இருக்குல்ல.. வாங்க மேட்டருக்குள்ள போவோம்.

சிங்கப்பூர்க்காரர்கள் பலருக்கும் இந்த இடத்தை நன்றாகத் தெரிந்திருக்கும்.. எஸ் பாஸ்.. அதே இடம்தான்.. ரேபிள்ஸ் ஹோட்டல்.. சிங்கப்பூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் போக வேண்டிய இடமும் கூட. குறிப்பாக மது அருந்தும் பிரியர்கள் கண்டிப்பாக போயே தீர வேண்டும். அவ்வளவு சுவாரஸ்யமான இடம் இது. 

காரணம் இந்த ஹோட்டலில் "சிங்கப்பூர் ஸ்லிங் காக்டெய்ல்" ரொம்பப் பிரபலம்.  இந்த ஹோட்டலின் அடையாளமும் இந்த காக்டெய்ல் மதுதான். 1915ம் ஆண்டு இந்த ஹோட்டலில் உள்ள பாரில் பணியாற்றி வந்த என்ஜியாம் டாங் பூன் என்பவர் தான் இந்த காக்டெய்லை உருவாக்கினார். அது முதல் இது மிகப் பிரபலமாகி விட்டது. சிங்கப்பூரின் தேசிய பானமாகவும் இது மாறி விட்டது.

ஜின் கலந்த இந்த காக்டெ்யலின் விலை என்ன தெரியுமா.. ஒரு கிளாஸ் காக்டெய்ல் 29 அமெரிக்க டாலர்கள் ஆகும்.  விடுமுறைக் காலங்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 1000 கிளாஸ் வரை காக்டெய்ல் விற்பனையாகுமாம். 

ஒரு நீளமான கிளாஸில் ஜின், செர்ரி  பழச்சாறு, பைனாப்பிள் ஜூஸ், லைம் ஜூஸ் உள்ளிட்ட பலவற்றையம் கலந்து இந்த காக்டெய்ல் பரிமாறப்படுகிறது.  உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரேபிள்ஸ் ஹோட்டலுக்கு வந்து இந்த காக்டெய்ல் சாப்பிடாமல் திரும்பிப் போவதில்லையாம். அந்த அளவுக்கு இது பிரபலமானது.



இதுக்கு ஒரு சுவாரஸ்யமான கதையும் உண்டு. அந்தக்காலத்தில் பொது இடங்களில் பெண்கள் மது அருந்தத் தடை இருந்ததாம். சாதாரணமானன ஜூஸ் இல்லாட்டி டீதான் குடிக்க முடியுமாம். இந்த நிலையில்தான் ரேபிள்ஸ் ஹோட்டல் பார் ஊழியர் என்ஜியாங்குக்கு ஒரு யோசனை வந்தது. மது அருந்த விரும்பும் பெண்களுக்காக இந்த காக்டெய்லை கண்டுபிடித்தார் அவர். அதாவது பார்க்க ஜூஸ் மாதிரியே இருக்கும்.. ஆனால் உள்ளே இருப்பது மதுக் கலவை. இதுதான் என்ஜியாங் கண்டுபிடித்த காக்டெய்லின் கதை. ஜூஸ் குடிச்ச மாதிரியும் ஆச்சு.. கூடவே மதுவையும் அருந்தியது போலவும் ஆச்சு என்பதால் பெண்கள் மத்தியில் இந்த காக்டெய்லுக்கு நல்ல மவுசு கிடைத்ததாம்.

இப்போது 100 வருடங்களையும் தாண்டி இந்த காக்டெய்ல் பரவசமாக அனைவராலும் அருந்தப்படுவது இதன் தரத்திற்கு சரியான சான்றாகும்.. இன்னொரு விசேஷமும் இந்த ஹோட்டலில் உள்ளது. இந்த ஹோட்டல் பாரில் நம்ம இஷ்டத்திற்குக் குப்பையைப் போடலாமாம். யாரும் கேட்க மாட்டார்களாம். சிங்கப்பூரில் எங்குமே நீங்க தரையில் எதையும் வீசி எறிய முடியாது.. அபராதம் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த பாரில் அப்படியெல்லாம் எந்தத் தடையும் கிடையாதாம். மாறாக, குப்பைப் போடாட்டி..  பரவாயில்லை சார் தூக்கி வீசுங்க என்று என்கரேஜ் செய்வார்களாம்.

சரி முதல்ல டிக்கெட்டைப் போட்டு கிளம்புவோம்.. மத்தத "அங்க" போய் பார்த்துப்போம்!

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்