சென்னை: நில அபகரிப்பு வழக்கிலிருந்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, சைதாப்பேட்டையில் ஒரு நிலத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயரில் அவர் வாங்கினார். ஆனால் இந்த நிலம் மோசடியாக அபகரிக்கப்பட்டதாக, திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2003ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. பொன்முடி உள்பட மொத்தம் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்துவந்த காலகட்டத்தில் சார்பதிவாளர் புரு பாபு, பொன்முடி மாமியார் சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ சைதை கிட்டு ஆகியோர் மரணமடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி. ஜெயவேல் இன்று தீர்ப்பை அறிவித்தார். அதில் சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 90 சாட்சிகள் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது விசாரணைக்குரிய வழக்கே அல்ல என்றும் இதனால் அப்பீல் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}