விஜய்யை தொடர்ந்து சமந்தாவும் சினிமாவுக்கு பிரேக் விடுகிறார்

Jul 05, 2023,01:08 PM IST
சென்னை : தளபதி 68 படத்தை முடித்ததும் 3 ஆண்டுகள் சினிமாவிற்கு பிரேக் எடுத்துக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்த விஜய் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் விஜய்யை போல் நடிகை சமந்தாவும் சினிமாவிற்கு பிரேக் விட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தாவிற்கு 2022 மயோசிடிஸ் என்ற நோய் எதிர்புசக்தி குறையும் நோய் கண்டறியப்பட்டதாக அவர் தனது ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்தார். சில நாட்கள் ஓய்விற்கு பிறகு அவர் மீண்டும் நடித்து வருகிறார். 



தற்போது வருண் தவானுடன் சிடாடல் இந்தியா என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தார். இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்க உள்ளார். குஷி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இரண்டு அல்லது 3 நாட்கள் நடைபெற உள்ளதாம். இதில் நடித்து முடித்த பிறகு ஒரு வருடத்திற்கு சினிமாவிற்கு பிரேக் விட்டு, தனது உடல்நலனில் கவனம் செலுத்த சமந்தா முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதனால் குஷி படத்திற்கு பிறகு எந்த மொழியிலும் எந்த படத்திலும் நடிக்க சமந்தா கமிட்டாகவில்லையாம். ஒரு சில படங்களில் நடிப்பதற்காக வாங்கிய முன்பணத்தையும் சமந்தா திருப்பி கொடுத்து வருகிறாராம். உடல்நிலை சரியாகும் வரை சமந்தா எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்ற தகவல் அவரத ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்