டிரான்ஸ்லேட்" ஆப்ஷன் ஒர்க் பண்ணலை.. டிவிட்டருக்கு என்னாச்சு.. குவியும் கேள்விகள்!

Jun 02, 2023,04:45 PM IST
சென்னை: டிவிட்டரில் டிரான்ஸ்லேட் ஆப்ஷன் சரியாக வேலை செய்யவில்லை. இது பயனாளர்களிடையே குழப்பத்தையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி ஏற்பட்டுள்ளதாக டிவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.

டிவிட்டரில் ஆங்கிலம் தவிர்த்து பல்வேறு மொழிகளிலும் பயனாளர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிடுகின்றனர். இவற்றை மொழிபெயர்க்கும் வசதி  முன்பு இல்லாமல் இருந்தது. ஆனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வசதி பின்னர் இணைக்கப்பட்டது. இதனால் யார் என்ன எழுதினாலும் அந்த மொழி தெரியாதோரும் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.



ஆனால் கடந்த சில நாட்களாக இந்த மொழிபெயர்ப்பு வசதி வேலைசெய்யவில்லை. பலருக்கும் இந்த மொழி பெயர்ப்பு வருவதில்லை. சிலருக்கு மட்டுமே வருகிறது. அதுவும் கூட எல்லா ஹேன்டிலுக்கும் வருவதில்லை. இதனால் பயனாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலம் இல்லாத வேறு மொழிகளில் எழுதப்படும் டிவீட்டுகளைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது டிவிட்டர் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ஒரு பயனாளர் கேட்ட கேள்விக்கு டிவிட்டர் சப்போர்ட் அளித்துள்ள விளக்கத்தில்,  மன்னிக்கவும். இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் அறிந்துள்ளோம். அதை சரி செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் டிவிட்டருக்கு வந்தது முதலே இப்படித்தான் ஏதாவது கோக்குமாக்கான குழப்பம் வந்து கொண்டே இருக்கிறது. இடையில் லோகோவை மாற்றினார்கள். பிறகு வார்த்தையை கூட்டினார்கள். பிறகு ப்ளூ டிக்கை நீக்கினார்கள்..  வீடியோவை சேர்க்கப் போவதாக கூறினார்கள்.. இப்போது டிரான்ஸ்லேஷன் ஆப்ஷனில் பஞ்சாயத்து வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்