பீட்டர் பாலை என் கணவர்ன்னு சொல்லாதீங்க.. ஷாக் கொடுத்த வனிதா விஜயக்குமார்

May 03, 2023,11:28 AM IST
சென்னை : மறைந்த பீட்டர் பாலை தனது கணவர் என சொல்ல வேண்டாம். அவர் தனது கணவர் கிடையாது என நடிகை வனிதா விஜயக்குமார் மீடியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் விஜயக்குமார் - மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜயக்குமார் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 

திடீரென விவாகரத்து, தந்தை விஜயக்குமாருடன் மோதல், இரண்டாம் திருமணம் என மீடியாக்களை பரபரப்பாக்கினார் வனிதா விஜயக்குமார். பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.



அடுத்தடுத்த சர்ச்சைகளால் மீடியாக்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்தார் வனிதா விஜயக்குமார். இவர் 2020 ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகின. ஆனால் திருமணம் நடந்த சில நாட்களிலேயே இந்த திருமணம் செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என பீட்டர் பாலின் முதல் மனைவி கோர்ட்டிற்கு போனார். இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

சில மாதங்களிலேயே பீட்டர் பாலையும் பிரிவதாக வனிதா அறிவித்தார். அதற்கு பிறகு சினிமா வாய்ப்புக்கள் அதிகம் வந்ததால் அதில் கவனம் செலுத்த துவங்கினார். சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயக்குமார் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால், சமீபத்தில் உயிரிழந்ததாக மீடியாக்களில் செய்தி வெளியானது. இதில் பீட்டர் பாலை, வனிதாவின் கணவர் என பல மீடியாக்களும் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டன.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆன நிலையில், தற்போது வனிதா விஜயக்குமார் மீடியாக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், பீட்டர் பால் என்னுடைய கணவர் கிடையாது. நான் அவருடைய மனைவியும் இல்லை. 2020 ம் ஆண்டு நாங்கள் ஒன்றாக இருந்தோம். அந்த உறவு அந்த ஆண்டே முடிவுக்கு வந்தது. நான் பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் பீட்டர் பாலை என்னுடைய கணவர் என சொல்லாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் மீண்டும் வனிதா விஜயக்குமாரின் இந்த வேண்டுகோள் குறித்த விஷயம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை என்றால் எப்படி பகிரங்கமாக வரவேற்பு நடத்திய நடத்திய வீடியோ,போட்டோக்களை வனிதா வெளியிட்டார்? இவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் பீட்டர் பாலின் முதல் மனைவி எதற்காக வனிதா மீதும், பீட்டர் பால் மீதும் வழக்கு தொடர்ந்தார்? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்