வாட்டி வதைக்கும் சென்னை வெயில்.. காரணம் என்னன்னு தெரியுமா ?

May 16, 2023,12:53 PM IST
சென்னை : சென்னையில் தொடர்ந்து வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது.

இந்த ஆண்டில் கடந்த சில நாட்களாக சென்னை வெயில் 40 டிகிரி செல்சியசை கடந்துள்ளது. 2021 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு தற்போது தான் சென்னை வெயில் 40 டிகிரியை தாண்டி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமலும், தங்களின் அன்றாட வேலைகளை கூட சரியாக செய்ய முடியாமல் வியர்வையிலும், புளுக்கத்திலும் தவித்து வருகின்றனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மே மாதத்தில் சென்னையில் வெப்பநிலை 40 டிகிரியை கடந்தது என்றாலும் அப்போது லாக்டவுனில் இருந்ததால் பெரும்பாலானவர்கள் ஒர்க் ஃபிரம் ஹோம் செய்து வந்தனர். தொழில்களும் பெரிதாக துவங்கப்படவில்லை. அதனால் இந்த அளவிற்கு மக்கள் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. 



சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்துகிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகியவற்றில் 40.08 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 3.4 மற்றும் 2.4 டிகிரிகள் அதிகம். மொர்சா புயல் தான் இதற்கு காரணம். மொர்சா புயல், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து விட்டதால் தான் இந்த அளவிற்கு வெப்பம் அதிகரித்து காணப்படுவதாக பலர் மொர்சா புயல் மீது பழி போடுகிறார்கள். 

இதே வெப்பம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வரை 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்தே காணப்படும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் வெயிலுக்கு பயந்து வீட்டிற்குள்ளாகவே இருக்கலாம் என்றால் கூட தண்ணீர், தரை, ஃபேன் காற்று என அனைத்தும் அனலை கக்குகின்றன. 

திடீரென அதிகரித்த இந்த வெப்பத்திற்கு காரணம் என்ன என பலரும் குழம்பி வரும் நிலையில் இந்திய வானிலை மைய மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், மொர்சா புயலால் காற்றின் திசை மாறியது, காற்று ஒரே திசையில் அடிக்காததால் மேகங்கள் கூடி, சாரல் மழை விழுவது தவறியது போன்ற பல காரணங்கள் வெப்பநிலை அதிகரித்துள்ளதற்கு காரணம். 

ஆந்திராவில் இருந்து வரும் அனல் காற்று அப்படியே தமிழகம் வழியாக கடந்து செல்வதால் தான் இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் காற்றில் வெப்பம் அதிகமாக உள்வாங்கப்படுவதால் சென்னையின் கடலோர பகுதிகளில் வெப்பம் 41 டிகிரிக்கும் அதிகமாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார். இதே கருத்தை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்