- கவிதா உடையப்பன், சேலம்
பதைபதைத்தது நெஞ்சம்
கொடுத்து விட்டேனடி லஞ்சம்
நெறியல்ல என்று தெரிந்தும்
தழுதழுத்தது குரல்
முன்வரிசையில் நின்றோர் வினவ
சுய மானம் நழுவ
என் செய்வேனடி நானும்?
நேர் வழியில் செல்ல, நேரமில்லையடி
உரிய முறையில் செல்ல உதவும் கரங்களில்லையடி
துடிதுடித்தது எனது நா
அந்த ஊழியரைப் பிடித்து உலுக்க
இங்கு சாமான்யனோ பரிதவிக்க
ஏனடா இந்நிலை?
மனித பேராசையினால் வந்த சூழ்நிலை!
மாறும் ஒரு நாள் வானிலை

கிடுகிடுத்தது வானம்!
அக்கிரமங்களை எச்சரித்து
சத்தியப்பாதையை எடுத்துரைத்து
எப்படித்தான் இயங்குவது?
ஈட்டுவது நல்வழியிலா என்று இல்லத்தாரும் பரிசீலிப்போம்
"என் பணி என் கடமை" என்றே நாம் செயல்படுவோம்
மன சஞ்சலம் கலைந்து
உயர் லட்சியமதில் நனைந்து
தஞ்சம் அடைவோமே அறவாழ்வில்!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}