லியோ வெற்றி விழாவுக்குப் போகணுமா.. ஆதார் முக்கியம் பாஸ்... பிறகு.. ரசிகர்களுக்கு அனுமதி கிடையாதாம்!

Oct 31, 2023,06:47 PM IST

சென்னை: லியோ வெற்றி விழாவில் பங்கேற்க ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ வெற்றிவிழாவில் பங்கேற்க விழாவுக்கான பாஸ் உடன் ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதை விட முக்கியமாக, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், ரசிகர்கள் இதில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் லியோ. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. லியோ படத்தின் வெற்றியை கொண்டாட நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கொண்டாட்ட மூடில்  உள்ளனர். 


விஜய் இப்படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதன் படி லியோ வெற்றி விழாவை நவம்பர் 1ம் தேதி புதன் கிழமை கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இந்த விழாவிற்கு 200 முதல் 300 கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்விழாவில்  5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், பேருந்தில் வர அனுமதியில்லை எனவும் காவல்துறை தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.


இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 


ஆன்லைன் அனுமதி பாஸ்,  மன்ற நிர்வாகிக்கான அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது  ஆதார் அட்டை நகல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் தங்களது ஆதார் அட்டையையும் அவசியம் எடுத்து வந்தால் மட்டுமே நேரு உள்விளையாட்டு அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.


நாளை மாலை 4 மணி முதல் நிர்வாகிகள் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. அதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடாமல் இருப்பதற்காக தான் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்