ஆடி அமாவாசைக்கு சதுரகிரி கோவிலுக்குப் போறீங்களா?.. அப்படீன்னா இது உங்களுக்கு தான்!

Jul 27, 2024,01:00 PM IST

விருதுநகர்:   ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில கட்டுப்பாடு குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். காரணம் இது வனப் பகுதியில் இருப்பதால். தினமும் இங்கு சாமி தரிசனம் செய்ய முடியாது. மாதத்திற்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்களுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.




சதுரகிரி மலைக்கு மற்ற அமாவாசைகளை விட ஆடி அமாவாசைக்கு தான் அதிகளவில் கூட்டம் வரும். இந்தாண்டு ஆகஸ்ட் 1 முதல் 5 ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதே போல 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது.


இங்கு இரவில் தங்கக்கூடாது. அருகில் உள்ள ஓடைகளிலும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்களின் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பாதையில் அனுமதியின்றி கடைகள் அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் முன்னேற்பாட்டு பணிகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்