ஆலோலம் பாட்டுக் கேட்குதே

Jun 17, 2026,03:29 PM IST
- பாவலர் மாயோன் மங்கை

ஆலக் கரும்பு காடு
ஆலக்கரும்புக் காடு

அடுத்தடுத்து சோளக்காடு
அடுத்தடுத்துச் சோளக்காடு

கரும்புக் காட்டுக்குள்ளே
கரச்சாங்குருவி ஒன்னு

காதலனக்  காணாமெ
கரஞ்சுதான் பாடிடுதே
கரஞ்சுதானேபாடிடுதே

வர்றவங்க போறவங்க
வலியக் கேட்காம
வந்த வழி போறாங்க
வந்த வழி போறாங்க

வெள்ளச் சோளக்காடு
வெளஞ்ச நல்ல காடு




சோளத்தத் தின்னு தின்னு
சோக்காத்தான் இருக்குதுங்க

கரச்சாங்குருவியிலே
பெண் கரச்சான் ராகம்போட

கட்ட வண்டி மாமனும்தான்
கிட்ட வந்து கேட்டானே

மாமன் தான் கேட்டதுமே
மடி மேலே விழுந்தழுது

காதலன் என்ன விட்டு
வேறெ காதல்  செய்யறாரே

நாலு நாளாச்சு 
நாங்க ரெண்டும் பார்த்துத்தான்

நானுந்தான் வான் பறந்து
வலியவலியத் தேடுறனே

சோகம்  தாங்காமெ சொல்லிய
கரச்சானுக்கு

மேக மா மழை பொழிய
மேனியத் தடவித்தந்து

கரையாதே உருகுதே
ஆறறிவு மனுசனுமே

காதலத்தான் மறக்கறாங்க
கட்டியவள வெறுக்கறாங்க


மாமனும் சொல்லுச்சே
மலைமலையா அழுதுச்சே

எனக்கும் அழுகை தான்
என் கரச்சானே  எங்கே நீ போனே
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்