- ஸ்வர்ணலட்சுமி
அபிஜித் நட்சத்திரம் அபிஜித் முகூர்த்தம்.. வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம் அற்புதமான 24 நிமிடங்கள்(golden 24 minutes)அதாவது கோல்டன் 24 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.
அபிஜித் நட்சத்திரம் என்பது 28 நட்சத்திரங்களில் 28 வது நட்சத்திரமாகும்.இது ஒரு இடைப்பட்ட நட்சத்திரம். மேலும் வெற்றி அதிர்ஷ்டம் மற்றும் நல்ல பலன்களை தரக்கூடியதாக கருதப்படுகிறது. பணம், பதவி, அந்தஸ்து, அனைத்திலும் வெற்றி கிடைக்கும் அபிஜித் நட்சத்திரம் பற்றிய அற்புதத்தை காண்போம்.
அபிஜித் நேரம் தினமும் வருவது .சூரிய உதயத்திற்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தை போல சூரிய உதயம் ஆன பின்பு சரியாக ஆறு மணி நேரம் கழித்து வருவது தான் அபிஜித் நேரம். "ஜித் "என்றால் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். "அபிஜித்" என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது அர்த்தமாகும்.

அபிஜித் நட்சத்திரம் ஒரு நல்ல அதிர்ஷ்ட நட்சத்திரமாக கருதப்படுகிறது .இது மாதம் ஒருமுறை அல்லது இருமுறை வருகிறது. அபிஜித் முகூர்த்தம்: தினமும் பகல் முடிந்து உச்சி காலம் ஆரம்பிக்கும் நேரத்தில் வருகிறது .இந்த நேரமும் நல்ல பலன்களைத் தரும். நண்பகல் உச்சி நேரம் பகல் 11: 45 மணி முதல் 12 :15 மணி வரை அபிஜித் முகூர்த்தம். ஏப்ரல் 21 ஆம் தேதி திங்கட்கிழமை அஜித் நட்சத்திரம் மதியம் 12 :25 மணி முதல் 12: 49 மணி வரை வருகிறது.
அபிஜித் நட்சத்திர நன்மைகள்:
இந்த நட்சத்திர நேரம் 24 நிமிடத்தில் தொடங்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது ஐதீகம் .அபிஜித் நட்சத்திரம் மற்றும் அபிஜித் முகூர்த்தம் நல்ல பலன்களை தரக்கூடியது. *திங்கட்கிழமைகளில் அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும். *செவ்வாய்க்கிழமைகளில் வேண்டுதல் வைத்தால் வீடு யோகம் கிட்டும் கடன் தீரும் .*புதன்கிழமைகளில் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். *வியாழக்கிழமைகளில் வேண்டுதல் வைத்தால் வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும் ,கல்வியில் மேன்மை கிடைக்கும். *வெள்ளிக்கிழமைகளில் வேண்டுதல் வைத்தால் திருமண யோகம் கிடைக்கும். *சனிக்கிழமைகளில் வேண்டுதல் வைத்தால் வம்பு வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும். *ஞாயிற்றுக்கிழமைகளில் வேண்டுதல் வைத்தால் வினைகள் அகலவும், உடல்நலம் மேம்படவும் போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.
அபிஜித் முகூர்த்தம் அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும் நேரமாக கருதப்படுகிறது. அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற்று அவரவர் இலக்குகளை அடைய வழி வகுக்கிறது. நம் வீட்டு பூஜை அறையில் நெய் விளக்கேற்றி அபிஜித் நட்சத்திரம் மற்றும் அபிஜித் முகூர்த்த ம நேரத்தில் வழிபட வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி பல கோடி நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகம்.
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}