பத்மபூஷண் விருது... குவியும் வாழ்த்துகள்.. ஆனால் அஜீத் குமார் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

Jan 26, 2025,12:07 PM IST

சென்னை: நடிகர் அஜீத்திற்கு பத்மபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


ஆசியா ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்காக நடிகர் அஜீத் குமாருக்கு இந்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கெளரவிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அஜீத்திற்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதால் அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சோஷியல் மீடியா மூலம் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்நிலையில் தனக்கு நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய விருதான பத்மபூஷண் விருது கிடைத்துள்ளது பற்றி அஜித் என்ன கூறினார் என்பது பற்றிய தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா.


அவர் தன்னுடைய பதிவில், இந்த பத்ம விருதினை இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியாக கெளரவமாக உணர்கிறேன். இந்த கெளரவத்திற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவிற்கு ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்கு, நாட்டிற்காக என்னுடைய பங்களிப்பு இருந்துள்ளதை மிகவும் பெருமையாக உணர்கிறேன். 




மறைந்த என்னுடைய அப்பா இந்த நாளை பார்ப்பதற்காக உயிருடன் இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் என்னுடைய இந்த உத்வேகம், செயல்பாடுகள், அங்கீகாரம் அனைத்தையும் கண்டு நிச்சயம் அவர் பெருமைப்படுவார். எனக்கு அளவில்லாத அன்பை தந்த என்னுடைய அம்மாவிற்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய தியாகம் தான் என்னால் அனைத்தையும் செய்ய முடிந்தது. 


திரையுலகை சேர்ந்த சீனியர்கள், சொல்லப்படாத பலர் உள்ளிட்ட அனைத்து திரையுலக உறுப்பினர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த உத்வேகம், ஒத்துழைப்பு, ஆதரவு ஆகியவை தான் என்னுடைய மற்ற துறைகள் சார்ந்த கனவுகளில் இந்த அளவிற்கு பயணிக்க முடிந்தது. எனக்கு இத்தனை வருடங்களாக ஆதரவு  அளித்த மோட்டர் ரேசிங் அமைப்பு, துப்பாக்கி சுடுதல் அமைப்பினர் ஆகியோருக்கும் என்னுடைய நன்றிகள். மெட்ராஸ் மோட்டர் ஸ்போர்ட்ஸ் கிளப், ஃபெடரேஷன் ஆஃப் மோட்டர் ஸ்போர்ட்ஸ் கிளப்ஸ் ஆஃப் இந்தியா, ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் ஆதாரிட்டி ஆஃப் தமிழ்நாடு, தேஷனல் ரைஃபில் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா, சென்னை ரைஃபிள் கிளப் ஆகிய அனைத்து விளையாட்டு துறை அமைப்புக்களுக்கும் என்னுடை நன்றிகள்.


அடுத்ததாக ஷாலினி, என்னுடைய மனைவி, உற்ற துணையாக கிட்டதட்ட 25 அற்புதமான ஆண்டுகள் என்னுடைய இருந்துள்ளார். ஷாலினி, உன்னுடைய உற்சாகம், தூண் போன்ற நம்பிக்கை தான் என்னுடைய வெற்றிக்கு காரணம். பிறகு என்னுடைய குழந்தைகள் அனோஷ்கா, ஆத்விக். நீங்கள் என்னுடைய பெருமைகள். என்னுடைய வாழ்க்கையின் வெளிச்சம், எப்படி சரியாக இருக்க வேண்டும், அனைத்தையும் எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என என்னை ஊக்குவித்து முன்னுதாரணமாக இருந்துள்ளீர்கள். 


இறுதியாக என்னுடைய அனைத்து ரசிகர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள்...உங்களின் அளவிட முடியாத அன்பு, ஆதரவு தான் என்னுடைய கனவு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உயிர்நாடியாக உள்ளது. இந்த விருது எனக்கு கிடைத்ததற்கு நீங்கள் தான் காரணம். எப்போதும் என்னுடைய பயணத்தில் துணையாக இருந்து, இந்த மிகப் பெரிய கெளரவத்தை கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இதே நேர்மை, கனவுடன் தொடர்ந்து எனது பங்களிப்பை அளிப்பேன். இதே போல் உங்களின் வாழ்க்கை பயணமும் வளர்ச்சி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டார்.


1993ம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அஜீத், தொடர்ந்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த அஜித் சினிமாவுடன் சேர்ந்தே தன்னுடைய விளையாட்டு துறை மீதான காதலையும் தொடர்ந்து வந்தார். மோட்டர் விளையாட்டு துறையில் பலரையும் கவரும் வகையில் பல விருதுகளை பெற்றுள்ளார். மோட்டர் பைக், கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல் என பல விளையாட்டு துறைகளிலும் தன்னுடைய பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னுடைய சொந்த கார் ரேஸ் அணியையும் உருவாக்கி, அதன் மூலமும் பல வெற்றிகளை பெற்று வருகிறார்.


நடிகர் சங்கம் வாழ்த்து


தென்னிந்திய நடிகர் சங்கம் அஜீத்தை வாழ்த்தியுள்ளது. அது விடுத்துள்ள அறிக்கையில், தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து போட்டிகள் மிகுந்த திரைத்துறையில் உச்சத்தில் ஒரு இடம் பிடித்து அரியதொரு போட்டியில் உலக வரைபடத்தில் தன் பெயரை பொன்னேட்டில் பதித்த நண்பர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் கவுரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமை கொள்கிறது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: கன்னியாகுமரியில் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டம்

news

புதுச்சேரி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை...முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று கிடைக்க தாமதமாக காரணம் இது தானா?

news

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைத்தது இங்கிலாந்தில்

news

எடப்பாடி பழனிச்சாமி டில்லி செல்வதற்கு இதற்கு தானா?

news

இறுதிக்கட்டத்தை எட்டிய வடகிழக்கு பருவமழை... ஜனவரி 9 மற்றும் 10ம் தேதியுடன் முடிய வாய்ப்பு!

news

தமிழகத்தில் குளிர்காலத்தில் இயல்பை விட 81% அதிக மழை பதிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்