சென்னை: 3 கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது அதை இயக்குவேன். அதில் ஒரு கதை யோகி பாபுவுக்கு எழுதியது என்று கூறியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
ஜெயம் ரவியின் குடும்பத்தில் ஏகப்பட்ட சினிமாக்காரர்கள் உள்ளனர். அவரது தந்தை மோகன் சிறந்த எடிட்டராக வலம் வந்தவர். அண்ணன் ராஜா, சிறந்த இயக்குநராக வலம் வருபவர். அட்டகாசமான சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஜெயம் ரவியோ, சிறந்த நடிகராக வலம் வருபவர். அவரது மாமியார் சுஜாதா விஜயக்குமார், திரைப்படத் தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
இந்தநிலையில் ஜெயம் ரவிக்குள்ளும் இயக்குநராகும் கனவு துளிர்க்க ஆரம்பித்துள்ளது. இதை அவர் சொல்லியுள்ளார்.
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் சைரன். இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் வெளி வர உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கைதையில் உருவாகி இருக்கிற இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிப்ரவரி 16ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வந்துள்ளது.ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தில் போலீசாக கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் ஜெயம் ரவி ஜோடியாக மலையாள நடிகை அனுபாமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். அவர் கேரக்டர் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் கைதி என இருவேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி வருகிறார்.
படம் குறித்து ஜெயம் ரவி கூறுகையில், நானும் இயக்குநராகும் கனவில் இருக்கிறேன். 3 கதை கூட ரெடியாக இருக்கிறது. நேரம் அமைய வேண்டும். அப்போது இயக்குநர் ஆவேன். யோகி பாபுவுக்கு ஒரு சூப்பரான கதை ரெடியாக இருக்கிறது. பார்க்கலாம் என்று கூறியுள்ளார் ஜெயம் ரவி.
ஜெயம் ரவி அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில், தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். பிரதமர் படமும் வெயிட்டிங்கில் உள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா.. மோகன்ராஜா இயக்கத்தில் பரத நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடிக்கவும் ரெடியாகி வருகிறாராம் ஜெயம் ரவி. முழுமையாக பயிற்சி எடுத்த பின்னர் இந்தப் படத்தை உருவாக்கப் போகிறார்களாம்.
பரதநாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் இதற்கு முன்பு கமல்ஹாசன் (சலங்கை ஒலி), அஜீத் (காட்பாதர்) ஆகியோர் நடித்துள்ளனர். அந்த வரையில் ரவியும் சேரவுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}