சென்னை: நடிகர் ஆர்.கே.சுரேஷ் திடீரென பாஜகவை விட்டு விலகி பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளார்.
அண்ணாமலையுடன் அவ்வளவு பாசமாக, வெறித்தனமான அன்பு காட்டி பழகி வந்தவர் ஆர்.கே.சுரேஷ். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு கடந்த முறை அண்ணாமலை அஞ்சலி செலுத்த வந்தபோது அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஆக்ரோஷமாக கோஷமிட்டு அனைவரையும் அதிர விட்டவர் ஆர்.கே.சுரேஷ்.
இந்த நிலையில்தான் ஆருத்ரா வழக்கில் ஆர்.கே.சுரேஷ் சிக்கினா். சில காலம் தலைமறைவாகவும் இருந்து வந்தார். பின்னர் போலீஸில் சரணடைந்தார். அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது. அதன் பின்னர் தனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்றும் இனி சினிமா மட்டும்தான் என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.
கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம்தான், ஆர்.கே.சுரேஷின் முதல் கட்சி ஆகும். அங்கு செயல்பட்டு வந்த அவர் பின்னர் அதிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார். அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாகவும் பழகி வந்தார். ஆனால் ஆருத்ரா வழக்கில் சிக்கிய பிறகு அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அரசியல் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கிய அவர் பின்னர் அதிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில்தான் திடீரென தற்போது இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளார். பாரிவேந்தர் நடத்தி வரும் கட்சிதான் இந்திய ஜனநாயகக் கட்சி. பெரம்பலூரை மையமாக கொண்டு செயல்படும் கட்சி இது. இக்கட்சி சார்பில் முதலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று எம்.பியாக இருந்தவர் பாரிவேந்தர். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றார். ஆனால் படுதோல்வி அடைந்தார்.
இந்தப் பின்னணியில் தற்போது இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். பாஜகவிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் உள்ள கட்சியில் இணைந்துள்ளதன் மூலம் பாஜகவை தான் முழுமையாக வெறுக்கவில்லை என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் சுரேஷ் என்று கூறப்படுகிறது.
ஐஜேகேவில் நிபந்தனையுடன் புதிய பதவி
இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ள ஆர்.கே.சுரேஷுக்கு அகில இந்திய அமைப்புச் செயலாளர் என்ற பதவியையும் அக்கட்சி கொடுத்துள்ளது. ஆனால் இந்தப் பதவி தற்காலிகமானதே. இது நிரந்தரமாக வேண்டும் என்றால் சில நிபந்தனைகளையும் கட்சி விதித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கட்சியின் கொள்கைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்று பணி சிறக்க வாழ்த்துகிறேன். மேலும் இப்பொறுப்பினை ஏற்கவுள்ள தாங்கள், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு அதிகளவில் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். இச்செயல்பாட்டினை அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்குள் நீங்கள் நிறைவேற்றினால், உங்கள் பதவி நிரந்தரமாகும் என்பதோடு, மூன்று வருடங்களுக்கு உங்களது பதவி நீட்டிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
{{comments.comment}}