சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ஆர்.கே. சுரேஷ், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை திரும்பியுள்ளார். நாளை மறு நாள் அவரிடம் பொருளாதார குற்றவியல் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த நிறுவனம்தான் ஆரூத்ரா கோல்டு. இது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் கிளைகளை வைத்திருந்து. இங்கு வாடிக்கையாளர்களிடம் முதலீடுகளைப் பெற்று வந்தது. அதிக அளவிலான வட்டி தருவோம் என்று கூறி முதலீடுகளைக் கவர்ந்த இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கிட்டத்தட்ட ரூ. 2000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பொருளாதார குற்றவியல் தடுப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மொத்தம் 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். புகாருக்குள்ளான ரூசோ என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஆர்.கே.சுரேஷுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீஸார் முடிவு செய்து விட்டனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவர் துபாய்க்குப் போய் விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆர்.கே.சுரேஷுக்குப் போலீஸார் சம்மன் அனுப்பினர். மேலும் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இப்படி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தால் விமான நிலையத்திலேயே வைத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியும். இந்த சம்மனையும், லுக் அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் சுரேஷ்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தோது டிசம்பர் 10ம் தேதி சென்னை திரும்பி விடுவார் சுரேஷ். அதன் பின்னர் போலீஸ் விசாரணையில் ஆஜராவார் என்று கோர்ட்டில் அவரது வக்கீல் உத்தரவாதம் அளித்தார். இந்த நிலையில் சொன்னபடி இன்று ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார். ஆனால் விமான நிலையத்தில் அவர் மீதான லுக் அவுட் நோட்டீஸ் நிலுவையில் இருப்பதால் அவரை தடுத்து நிறுத்தி விட்டனர் இமிகிரேஷன் அதிகாரிகள்.
ஆனால் தான் கோர்ட் உத்தரவுப்படியே வந்துள்ளதாகவும், போலீஸ் விசாரணையில் ஆஜராகவுள்ளதாகவும் ஆர்.கே.சுரேஷ் தரப்பில் விளக்கம் கொடுத்த பின்னர் அவரை வெளியில் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து நாளை மறு நாள் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார் ஆர்.கே.சுரேஷ்
விசாரணைக்குப் பின்னரே அவர் கைது செய்யப்படுவாரா என்பது குறித்துத் தெரிய வரும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}