சென்னை: பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் அளித்த பரிசு குறித்து வில்லங்கமாக கருத்து தெரிவித்த நபருக்கு, நடிகர் சூரி, பக்குவமாக பொறுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் சூரியும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருபவர். அவரது காளைகளும் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு கலக்கியுள்ளன. இந்த நிலையில் நேற்று நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். சூரியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு, சூரி ஒரு நினைவுப் பரிசை வழங்கினார். அதாவது ஜல்லிக்கட்டுக் காளை சிலையை பரிசாக அளித்தார்.
இதுகுறித்த வீடியோவைப் பகிர்ந்து விஸ்வநாதன் என்பவர் இனிமேல் நடிகர் சூரியும் ₹200 கொத்தடிமை. அடுத்த படம் தவெக மீறி எப்டி ரிலீஸ் செய்யப் போறாரோ? என்று தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு சூரி பொறுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

சூரி வெளியிட்டுள்ள பதில் பதிவில், தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான்.
கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்.
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை
பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King. அதை தீர்ப்பது
சத்தம் போடுறவர்கள் அல்ல; அதை பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான்.
நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும்; இல்லன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை என்று கூறியுள்ளார் சூரி.
சூரியின் பதிலைப் பார்த்த அந்த பதிவர் விஸ்வநாதன், வருத்தம் தெரிவித்து பதில் டிவீட் போட்டிருந்தார். அதில், சூரி
ஐயா நான் வெள்ளாட்டுக்கு இட்ட பதிவை சீரியஸா எடுத்துட்டு ரிப்ளை கொடுத்திருக்கிங்க. Rreview என்ற பெயரில் படம் பிரசவித்த உடனே, கத்தியுடன் அலையும் கிராதகர்களை கிண்டலடிக்கும் பதிவு அது. தவறான புரிதல் உண்டாக்கி, உங்களைப் புண்படுத்தியதற்கு வருந்துகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கும் சூரி ஒரு பதில் போட்டிருந்தார்.
"தம்பி. தன் தவறை உணர்ந்து அதை ஒத்துக்கொள்ளும் மனசு எப்போதும் மதிப்புக்கு உரியதுதான். வேடிக்கை என்ற பெயரில்கூட பிறரின் பெயர், படம் அல்லது நிழலை பயன்படுத்தி பிரச்சனை உருவாக்குவது சரியானது அல்ல.
அது நமக்கும், அவர்களுக்கும் மதிப்பை கெடுக்கும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமும் ஒரு காரணமும் உண்டு; அதை மறக்கும் சொற்களும் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சூரி கூறியிருந்தார்.
தற்போது தனது பதிவுகளில் சினிமாவையும், அரசியலையும் கலக்க மாட்டேன் என்று விஸ்வநாதன் தெரிவித்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?
பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை
ஒருவரால் புறக்கணிக்கப்பட்டால்.. இன்னொருவரால் கொண்டாடப்படுவோம்.. இதுதான் வாழ்க்கை!
தமிழ்நாட்டின் பசுமைப் புரட்சிக்கான முன்னோடி.. ஜான் பென்னிகுயிக்
இணைவோம்.. கொண்டாடுவோம்.. Get together
எனக்கு நானே சிறந்த தோழி.. I am the best friend of me
விடுவிக்கப்படாத புதிர்கள்... Unanswered Riddles!
{{comments.comment}}