சென்னை: யதார்த்தமான நடிப்பையும், அன்பையும் நான் இழந்துவிட்டேன். நாங்கள் இணைந்து பணியாற்றியதும், அவர் எனக்கு கொடுத்த அறிவுரைகளையும் என்னால் மறக்கவே முடியாது. அண்ணன் டெல்லி கணேஷ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும், எதார்த்தத்தின் உச்சமாய் திரையில் வெளிப்படும் என்று நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு.
குணச்சித்திர நடிகராக வலம் வந்த நடிகர் டெல்லி கணெஷ் கடந்த 9ம் தேதி இரவு காலமானார். அவருக்கு வயது 80. 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் முக ஸ்டாலின், மநீம கட்சி தலைவர் கமலஹாசன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி கணேசுடன் இணைந்து நடித்த நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார். வடிவேலு வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

எனக்கு பிடித்த எத்தனையோ நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேசனும் ஒருவர். அதிக படங்களில் ஒன்றிணைந்து நடிக்க முடியவில்லை என்றாலும் சீனா தானா, மிடில் கிளாஸ் மாதவன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நாங்கள் இணைந்து நடித்தது இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
'நேசம் புதிசு' படத்தில் வரும் 'என்ன கையப் பிடித்து இழுத்தியா?' என்ற காலத்திற்கு நிலைத்து நிற்கும் காமெடிக்கு டெல்லி கணேஷ் அண்ணன் தான் காரணம். ஒரு நாள் அவரை சந்தித்தபோது, அவர் ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கூறினார். 'நேசம் புதிது' படத்தில் இதை பயன்படுத்தலாம் என நினைத்து, உடனே அவருக்கு போன் செய்து அனுமதி கேட்டேன். அன்போடு என்னை கண்டித்து விட்டு உடனே அனுமதி கொடுத்துவிட்டார். அவர் அனுமதிக்கவில்லை என்றால் இன்று அந்த காமெடியே இருந்திருக்காது. இந்நேரத்தில் அதை நினைவு கூர பெருமையுடன் கடமைப்பட்டுள்ளேன்.
அவரின் யதார்த்தமான நடிப்பையும், அன்பையும் நான் இழந்துவிட்டேன். நாங்கள் இணைந்து பணியாற்றியதும், அவர் எனக்கு கொடுத்த அறிவுரைகளையும் என்னால் மறக்கவே முடியாது.
அண்ணன் டெல்லி கணேஷ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும், எதார்த்தத்தின் உச்சமாய் திரையில் வெளிப்படும். அவரிடம் நீங்கள் அற்புதமான குணச்சித்திர நடிகர் என்பேன். அவரோ எனக்கு நடிக்கவே தெரியாது என்பர். அவரை நினைக்கையில் என்னை அறியாமலேயே அவரது எதார்த்தத்திற்குள் நானும் நுழைகிறேன்.
டெல்லி கணேஷனாய் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அற்புதமான நடிகனை நாம் இழந்து விட்டோம். பகத் பாசிலுடன் நான் இணைந்து நடிக்கும் மாரீசன் படப்பிடிப்பு, திருவண்ணாமலையில் நடைபெற்று வருவதால் என்னால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என வடிவேலு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்...5 கி.மீ.,க்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
இன்று டில்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக ஆஜராகிறார் விஜய்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
{{comments.comment}}