ஆதி குணசேகரன் ரோலில் நானா?... "சேச்சே".. நடிகர் வேல ராமமூர்த்தி மறுப்பு

Sep 11, 2023,01:32 PM IST
சென்னை : மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் ரோலில் இனி நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளதாக மீடியாக்கள் சிலவற்றில் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவலை வேல ராமமூர்த்தி மறுத்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் நடித்து வந்தார் நடிகர் மாரிமுத்து. இவர் இயக்குனர், உதவி இயக்குனர், குணசித்திர நடிகர் என சினிமாவில் பல ரோல்களில் பல படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரைக்கு வந்து ஆதி குணசேகரன் ரோலில் நடிக்க துவங்கிய பிறகு தான் இவருக்கு அதிக பெயரும் புகழும் கிடைத்தது. சமீபத்தில் சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்துவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தார். 



மாரிமுத்துவின் திடீர் மறைவு சின்னத்திரை, சினிமா உலகம், ரசிகர்கள் என அனைவரையும் பெரும் அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளது. மாரிமுத்து கடைசியாக நடித்த சீன், கடைசியாக பேசிய வசனங்கள் அனைத்தும் அவரது நிஜ வாழ்க்கையுடன் ஒத்து போவதாக இருப்பது பலரையும் கலங்க வைத்துள்ளது. இது பற்றிய தகவல்கள், வீடியோக்கள் தான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இனி ஆதி குணசேகரன் ரோலில் யார் நடிக்க போகிறார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த ரோலில் இனி கொம்பரம், கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் வேல ராமமூர்த்தி தான் நடிக்க உள்ளதாக சில மீடியாக்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தான் குணசேகரன் நடிக்கவில்லை என வேல ராமமூர்த்தி மறுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், ஆதி குணசேகரன் ரோலில் நடிப்பதற்காக சீரியல் டீம் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான். ஆனால், நான் தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறேன். இந்த நிலையில் சீரியலுக்காக நேரம் ஒதுக்க முடியா என்பது தெரியவில்லை. தற்போது கூட சினிமா ஷூட்டிங்கில் தான் இருந்து வருகிறேன். தற்போதும் எதிர்நீச்சல் டீம் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடித்த குணசேகரன் ரோலில் நடிப்பது பற்றி நான் இது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)

news

விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?

news

meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

அதிகம் பார்க்கும் செய்திகள்