இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை.. "மக்கள் பணிகள் தொடரும்".. அறிக்கை விட்டார் விஷால்!

Feb 07, 2024,06:23 PM IST
சென்னை: விஜய்யைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியலுக்கு வரப் போவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தனது மக்கள் நலப் பணிகள் தொடரும் என்றும் எதிர்காலத்தில் இயற்கை வேறு மாதிரியாக உத்தரவிட்டால், மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்றும் அவர் அறிக்கை விட்டுள்ளார்.

இதன் மூலம் இப்போதைக்கு விஷால் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தில் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

ஒருகாலத்தில் அரசியல் அபிலாஷையுடன் இருந்தவர்தான் விஷால். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக வேட்பு மனுவெல்லாம் தாக்கல் செய்தார். அதன் பின்னர் நடிகர் சங்கத் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் நடிப்போடு ஒதுங்கி விட்டார்.



ஆனால் சமீப காலமாக தான் போகுமிடமெல்லாம் மக்களை சந்தித்து வந்தார். அவரது ரசிகர் மன்றம் இதை வீடியோவாகவும் உருவாக்கி உலவ விட்டது. இதனால் அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியது. அவர் சாப்பிடும்போது  சாமி கும்பிடுவதெல்லாம் கூட வைரலானது.

இந்த நிலையில் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக விஷால் மாற்றியுள்ளார். இதனால் அவர் அரசியலுக்கு வரப் போவதாக மீண்டும் பரபரப்பு எழுந்தது. இதுகுறித்து இன்று தெளிவுபடுத்தியுள்ளார் விஷால். அவர் இதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் விஷால் கூறியிருப்பதாவது:

சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவனாக, உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரம் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம் தொகுதி கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன் என் தாயார் பெயரில் இயங்கும் தேவி அறக்கட்டளை மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடம் தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ மாணவியர்களை படிக்க உதவி செய்து வருகிறோம். மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.



அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்ததில்லை நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப் படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்துவரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார் விஷால்.

சமீபத்திய செய்திகள்

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

news

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை.. 13, 14 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

news

ராணுவத்திற்கு உதவ தயார்... சண்டிகரில் குவிந்த வரும் இளைஞர்கள்!

news

அறத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது: அண்ணாமலை!

news

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? பிசிசிஐ சொல்வது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்