இப்படியே விட்டு விடக் கூடாது.. கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.. அமலா பால் கோரிக்கை

Aug 31, 2024,05:53 PM IST

கொச்சி: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது வரவேற்புக்குரியது. அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதை இப்படியே விட்டு விடாமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.


சமீபத்தில் கேரளாவில்  வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரளாவில் பூகம்பமே கிளம்பியுள்ளது எனலாம். அந்த அறிக்கையில் கேரள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது சரமாரியாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உள்ளிட்டவர்களின் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையாள நடிகர் சங்கம் 'அம்மா' கலைக்கப்பட்டது. 




இதே பாணியில் தமிழ்நாட்டிலும் ஒரு குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மற்ற திரையுலகினரும் இதுகுறித்துப் பேசி வருகிறார்கள். ஹேமா கமிட்டி அறிக்கையை நடிகை சமந்தா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சமந்தா வெளியிட்ட பதிவில், தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் உமன் இன் கலக்ட்டிவ் சினிமா அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம். இதே போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையினால் பெண்களுக்கு பணியின் போது பாதுகாப்பு சூழல் அமையும் என்று தெரிவித்துள்ளார். 


அதேபோல, மலையாளம், தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ள நடிகை அமலா பாலும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர் கூறுகையில்,  ஹேமா கமிட்டி அதிர்ச்சி அளிக்கிறது, அச்சுறுத்துகிறது. அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த அறிக்கையை வெளியில் கொண்டு வர மலையாளத் திரையுலகைச் சேர்ந்த மகளிர் குழு மிகத் தீவிரமாக பாடுபட்டது. அதற்குக் கிடைத்த வெற்றியே இது. இந்த முயற்சியில் அவர்கள் தனித்து இல்லை. சட்டம் அவர்களுக்குத் துணை நின்றது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அப்படியே நீர்த்து போய் விடக் கூடாது. முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அமலா பால்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருட்டு நகையை மீட்க முடியாவிட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?

news

தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

news

நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!

news

தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?

news

எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!

news

ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?

news

திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்