சென்னை: லால் சலாம் படத்தில் நடித்துள்ள நடிகை தன்யா பாலகிருஷ்ணா, பல வருடங்களுக்கு முன்பு தனது சோசியல் மீடியா தளத்தில் தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் தன்யாவும் நடித்துள்ளார். இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் குறித்து கருத்து தெரிவித்து இவர் கூறியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் இவரை இப்படத்தில் நடிக்க வைத்திருப்பதா என்று கூறி பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன்யா பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்பதாக அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கை:
நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கூறியதாக பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியது அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதை தெளிவுபடுத்த முயன்றேன். ஆனால் அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கிரீன்ஷாட் ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிஷ்டவசமாக இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க எவ்வளவோ முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை.
இந்த 12 வருடங்கள் நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்கு காரணம், அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள் தான். அதிலிருந்து விலகி இருப்பதை எனக்கு சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியது அல்ல. நான் என் சினிமா பயணத்தை துவங்கியது தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருப்பேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே. அதனால் விளையாட்டுக்கு கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல என் கனவிலும் நினைக்க மாட்டேன்.
என் ஆரம்பகாலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது. மனிதாபிமான அடிப்படையிலும் நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில், எந்த வித சொல்லையும் செயலோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்கு பின் நான் சில தமிழ் திரைப்படங்களில் (ராஜா ராணி, நீதானே என் பொன்வசந்தம், கார்பன், சில தமிழ் வெப் சீரியல்களிலும்) நடித்துள்ளேன். அப்பொழுது இதுபோன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.
சர்ச்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும் துரதிஷ்டவசமாக என் பெயர் இதில் சம்பந்தப்பட்டு விட்டது. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மன உளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லதால் தவித்துக் கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு என்று அவர் கூறியுள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}