சென்னை: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும், தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
நடிகை கவுதமி கடந்த பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்து பணியாற்றி வந்தார். விருதுநகர் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். தொகுதியிலேயே தங்கியும் பணியாற்றி வந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அவருக்கு பல ஆண்டுகளாக எந்த முக்கியத்துவமும் பாஜக தராத நிலையில், 2021ம் ஆண்டு தேர்தலிலாவது சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். அப்போதும் அவருக்கு சீட் எதுவும் பாஜக வழங்கவில்லை.
இந்த நிலையில், தன்னுடைய சொத்து பிரச்சனை மற்றும் தனக்கு ஏற்பட்ட மனகசப்பு உள்ளிட்ட காரணங்களினால் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அத்துடன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொண்டார்.

அதேபோல பாஜகவில் எஸ்சி அணி மாநிலத் தலைவராக இருந்த தடா பெரியசாமியும் மக்களவை தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படாததால், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.கவுதமி மற்றும் தடா பெரியசாமி பாஜக கட்சியில் இருந்து விலகி நிலையில், அவர்களுக்கு தற்போது எடப்பாடி கே பழனிச்சாமி முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திரைப்பட நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்படுகிறார். இதேபோல அதிமுக சிறுபான்மையின நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலியும், விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சன்னியாசியும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது முக்கிய பதவிகளை வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே பாஜக தகவல் தொழில்நுட்ப அணியிலிருந்து நிர்மல்குமார் உள்ளிட்டோர் அதிமுக பக்கம் வந்து பதவிகளைப் பெற்றனர். பாஜகவுடன் உரசல் இருந்து வரும் நிலையில் அங்கிருந்து வந்தவர்களுக்கு அதிமுகவில் முக்கியப் பதவிகள் கிடைத்திருப்பது பாஜகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ள மறைமுக மெசேஜ் ஆக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
{{comments.comment}}