பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் .. எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில்.. அதிமுகவில் இணைந்தார்

Jan 19, 2024,07:06 PM IST

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.


நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் ஆவார். சார்லி சாப்ளின், மனசெல்லாம் நீயே, ஸ்டைல், விசில், வானம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பின்னர் திரைப்பட நடன இயக்குனராக  சிறிது காலம் செயல்பட்டார். அதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார்.


சிறிது காலத்திற்கு பின்னர், இவருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் 2022 நவம்பர் மாதத்தில் பா.ஜ.க.வில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார். பின்னர் இணைய பக்கங்களில் அண்ணாமலையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார் காயத்ரி ரகுராம். 




அவர் திமுக  அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்தநிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.


இது குறித்து, அதிமுக வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை இன்று 19.1.2024 சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், மறைந்த திரைப்பட இயக்குனர் சுப்பிரமணியம் அவர்களின் பேத்தியும் மறைந்த நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் அவர்களது புதல்வியுமான செல்வி காயத்ரி ரகுராம் அவர்கள் இன்று கழகப் பொதுச் செயலாளர் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!

news

கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

news

மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்