ஹைதராபாத்: சென்னையிலிருந்து தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் இந்து மக்கள் முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத் ஏற்பாட்டின் பேரில் பிராமணர்களின் உரிமை பாதுகாப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவராக கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அக்கூட்டத்தில் பேசிய கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்துக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தெலுங்கு பேசும் அமைப்புகள் பல புகார்கள் கொடுத்தன. இதன் பேரில் சென்னை, மதுரையில் கஸ்தூரி மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனு செய்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரியின் பேச்சு குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டுக்கு சமம் என்றும் அவர் கூறியிருந்தார்.

முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் கஸ்தூரியைக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். சென்னையிலிருந்து தலைமறைவான கஸ்தூரி டெல்லியில் பதுங்கியிருப்பதாக ஒரு தகவல் வந்தது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் தனிப்படை போலீஸார், தற்போது கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அங்கு அவர் பதுங்கியிருந்த தகவல் கிடைத்து சென்னை போலீஸார் அங்கு விரைந்து சென்று, ஹைதராபாத் போலீஸாரின் உதவியுடன் கஸ்தூரியைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சையாக பேசி விட்டு தெலுங்கு பேசும் மாநிலத்திலேயே போய் கஸ்தூரி பதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}