- மஞ்சுளா தேவி
சென்னை: நடிகையாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வரும் நடிகை பிரகதி தனது 47 வது வயதில் 2வது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஆந்திரா மீடியாவில் செய்தி வெளியானதால் கோபமடைந்து அதை வீடியோ போட்டு மறுத்துள்ளார்.
அவர் கோபமாக பேசி வெளியிட்ட வீடியோவை தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கி விட்டார்.
இயக்குநர் - நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான "வீட்டுல விசேஷசங்க" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. அந்தக் காலத்தில் அப்படம் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் கதை, பாடல்கள் உள்பட அனைத்துமே பேசப்பட்டன.

இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரகதி அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். பின்னர் திரையுலகில் குணசித்திர வேடங்களில் வலம் வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நாடகத்தில் இவருடைய ரோல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
இவர் இளம் வயதிலேயே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். இரண்டு மகன்களும் உள்ளனர். கணவரை விட்டுப் பிரிந்து தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் பிரகதி. இவருக்கு தற்போது வயது 47.
இந்த வயதிலும் சமூக வலைத்தளங்களில் டான்ஸ் ஆடுவது, மகனுடன் சேர்ந்து கலாய், காமெடி வீடியோக்கள், ரீல்ஸ்கள் செய்வது என்று சூப்பராக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல பளு தூக்குவதிலும் இவர் கில்லாடி.
இந்நிலையில் பிரகதி தயாரிப்பாளர் ஒருவரை இரண்டாவது திருமணம் பண்ணிக்க போறதாக ஆந்திரா மீடியாவில் செய்திகள் பரவியது. இதனால் டென்ஷன் ஆகி விட்டார் பிரகதி. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போட்டார். அதில், எனக்கு வயது 47 ஆகிறது. எந்த ஆதாரத்தில் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள். செய்தித்தாள், மீடியா போன்றவற்றில் தான் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக தவறாக வதந்திகள் பரவி வருகிறது. நான் இத்தனை காலமாக எந்த சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன் தெரியுமா.

நான் ஒரு சாதாரண நடிகை. மீடியாவில் எழுதுவதற்காக ஆதாரம் இல்லாமல் எதையேனும் எழுதலாமா.. கொஞ்சமாவது பொறுப்புடன் இருங்கள் என்று கடுமையாக பேசியிருந்தார். ஆனால் தற்போது அந்த வீடியோவை பிரகதி நீக்கி விட்டார்.. ஏன் என்று தெரியவில்லை.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}