சென்னை: தன்னைப் பற்றி தேவையில்லாமல் பொய்யான வதந்திகளை சிலர் பரப்புவதாக கோபம் காட்டியுள்ளார் நடிகை சிம்ரன். இதுபோன்று தவறான செய்திகளைப் பரப்புவோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
20 வருடங்களுக்கு முன்பு முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். விஜய், அஜீத், பிரஷாந்த், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக விஜய், அஜீத், பிரஷாந்த்துடன் இவர் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட்டானவை.
அழகிய நடனத்திற்கும், அட்டகாசமான நடிப்புக்கும் பெயர் போன சிம்ரன் தற்போது நல்ல நல்ல பாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தகன் படத்தில் சூப்பரான ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். விஜய்யுடன் அவரது கடைசிப் படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் நடிகை சிம்ரன் எக்ஸ் தளத்தில் ஒரு காட்டமான பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உணர்வுப்பூர்மாக உங்களை எப்படியெல்லாம் சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மன வேதனையாக உள்ளது. இதுநாள் வரை நான் என்னைப் பற்றி வெளியான வதந்திகளுக்குப் பதில் அளிப்பதை தவிர்த்து வந்தேன். ஆனால் இப்போது ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் - எந்த ஒரு முன்னணி ஹீரோவுடனும் இணைந்து நடிக்க நான் பதட்டப்படவில்லை, வேகம் காட்டவில்லை. முன்பு அவர்களுடன் நடித்தேன், அவ்வளவுதான்.
இப்போது எனது இலக்குகள் தெளிவாக உள்ளன. ஒரு பெண்ணாக, எனது எல்லைகள் குறித்து எனக்குத் தெரியும். பல வருடங்களாக எனது பெயர் எப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் வருகிறதோ அப்போதெல்லாம் நான் அமைதியாகவே இருந்தேன். யாருடனாவது இணைத்து என்னைப் பற்றி பேசி வருகிறார்கள். முதலில் சுய மரியாதை முக்கியம். இப்படி வதந்தி பேசுவதை முதலில் நிறுத்துங்கள். இதை சக்தி வாய்ந்த குரலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். யாருமே இந்த வதந்திகளை தடுத்து நிறுத்த முன்வரவில்லை, யாருமே எனது உணர்வுகள் குறித்துக் கவலைப்படவில்லை.
எது சரியோ அதைத்தான் நான் செய்வேன். எது சரியோ, அதன் பக்கம்தான் நான் நிற்பேன். எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் தேட மாட்டேன். இந்த உணர்வை திரைத்துறையைச் சேர்ந்த அறிவார்ந்த மக்களிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன். தவறான, அவதூறான வதந்திகளைப் பரப்புவோர் உடனடியாக இதை நிறுத்தி விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிம்ரன்.
சிம்ரன் திடீரென இவ்வாறு கோபமாக பேச என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் நடிகர் விஜய்யிடம், அவரை வைத்து படம் தயாரிக்க சிம்ரன் அணுகியதாகவும், ஆனால் அதை விஜய் ஏற்கவில்லை என்றும், பதிலாக அவருக்கு தயாரிப்பெல்லாம் எதற்கு, அதெல்லாம் பெரிய தலைவலி, பேசாமல் நிம்மதியாக இருங்க என்று விஜய் அட்வைஸ் கொடுத்ததாகவும் சில யூடியூபர்கள் பேசியுள்ளனர். இதுதான் சிம்ரனை கோபப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}