சென்னை: கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதி வரை என்னால் காத்திருக்க முடியவில்லை என நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா உற்சாகமாக கூறியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுவது ட்ரெண்டாகி வருகிறது. மேலும் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் தற்போது மீண்டும் ரசிகர்கள் ரசித்து அதே அனுபவத்தை பெரும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் மற்றும் நாயகன், ரஜினி நடித்த முத்து, அண்ணாமலை, உள்ளிட்ட பல படங்கள் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அந்த வரிசையில் ரசிகர்களை கிறங்கடிக்க செய்த பையா திரைப்படம் மீண்டும் ரீலிஸ் செய்யப்பட உள்ளது.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், வெளிவந்த பையா திரைப்படம் காதல்.. காமெடி.. சென்டிமென்ட்.. ஆக்சன்.. பாடல்கள்..என அனைத்து ஹிட் கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக நடிகை தமன்னாவுக்கு இந்த படம் தமிழ் சினிமாவில் முதல் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு தற்போது வரை தமன்னாவின் திரையுலக பயணம் ஏறு முகத்திலேயே சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பையா திரைப்படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.இதற்காக நடிகர் கார்த்திக்கு இயக்குனர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கார்த்தி மற்றும் இயக்குனர் லிங்குசாமி கூறுகையில்,

பையா எப்ப பாத்தாலும் அது புதுசாக தான் இருக்கும். இன்னொரு ஸ்பெஷலிட்டி.. படத்தை எந்த பகுதியிலிருந்தும் பாக்கலாம்.. குழப்பமே இல்லாத திரைக்கதைன்னு என் நண்பர்கள் எப்பவுமே சொல்லுவாங்க.. படத்தில் கார் டிராவலாகட்டும்.. சின்ன சின்ன சுவாரசியமான காதல் காட்சிகளாகட்டும்.. கலர் கலரான டிரசாகட்டும்.. யுவனின் பாட்டுகள்.. மதியின் அசத்தலான ஒளிப்பதிவாகட்டும்.. படபிடிப்பில் என் கூடவே இருந்த வசனகர்த்தா பிருந்தா சாரதியாகட்டும், மக்கள் கொண்டாடிய தமன்னாவாகட்டும்.. எல்லாமே ஒரு சுகமான அனுபவம். அதன் பிறகு தியேட்டரில் ரசிகர்கள் குடும்ப குடும்பமாக கொண்டாடியதாகட்டும்.. என பையா பட அனுபவங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
இது குறித்து தமன்னாவும் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், 14 வருடங்களுக்குப் பிறகும் கூட ‘பையா’ படத்தின் மீதான அன்பு இப்போதும் குறையாமல் பலமாக இருப்பதை பார்ப்பதே சிறப்பான உணர்வை தருகிறது. இந்த காலகட்டத்தில் கூட இந்த படத்திற்கு கிடைத்து வரும் பாசத்தையும் அன்பையும் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக உணர்கிறேன்.
என் மனம் உற்சாகத்தால் நிரம்பியுள்ளது. மீண்டும் பெரிய திரையில் ‘பையா’ படத்தின் மேஜிக்கை உங்கள் அனைவருடனும் சேர்ந்து அனுபவிப்பதற்காக என்னால் காத்திருக்க முடியாது. இயக்குநர் லிங்குசாமி சார், கார்த்தி, யுவன் சங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் இப்படி அற்புதமான நினைவுகளை கொடுத்ததற்காக முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா குறிப்பிடும் போது, வரும் 11ம் தேதி மீண்டும் அந்த அழகிய மேஜிக்கல் லவ் ஸ்டோரியை சில்வர் ஸ்கிரீனில் பார்க்க ஆர்வமாக உள்ளது என கூறியுள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}