சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார், தன்னை நடிகர் பிரதீப் ஆண்டனின் ஆதரவாளர் ஒருவர் கடுமையாக தாக்கி விட்டதாக புகைப்படத்துடன் டிவபீட் போட்டுள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு பிக் பாஸ் தமிழ் 7வது சீசன் சண்டைக் கடையாக காட்சி தருகிறது. இஷ்டத்திற்கு சண்டை போடுகிறார்கள்.. என்னவெல்லாமோ பேசுகிறார்கள்.. பார்க்க முடியாத அளவுக்கு முகம் சுளிக்கக் கூடிய வகையிலான பல காட்சிகளை மக்கள் பார்க்கும் நிலை உள்ளதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயக்குமார் தான் தாக்கப்பட்டதாக கூறி ஒரு புகைப்படத்தைப் போட்டு புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார். பிக் பாஸ் தமிழ் 7 விமர்சனத்திற்காக தான் தாக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் ஆரம்பித்து விட்டாலே போதும் பல பிரபலங்கள் டிவிட்டரில், யூடியூபில் விமர்சனம் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே பிக் பாஸ் பாஸ் நிகழ்ச்சியின் புரமோட்டர்கள் போல மாறி விடுவார்கள். பலர் விமர்சித்துத்தான் ரெவ்யூ கொடுப்பார்கள். நடிகை ஸ்ரீபிரியா கூட ஜாலியாக விமர்சனம் செய்வார். ஒன் லைனாக அவர் போடும் ரெவ்யூக்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.
நடிகை வனிதாவும் யூடியூபில் பிக் பாஸ் புரோகிராம் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இவர் முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் கூட. இப்போது இவரது மகள் ஜோவிகா பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் கண்ணு, கன்னம் எல்லாம் வீங்கிய நிலையில் ஒரு புகைப்படத்தைப் போட்டுள்ளார் வனிதா விஜயக்குமார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடுமையாக தாக்கப்பட்டுள்ளேன். யார் என்று தெரியவில்லை. பிரதிப் ஆண்டனியின் ஆதரவாளர் என்று நினைக்கிறேன். எனது பிக்பாஸ் தமிழ் 7 விமர்சனத்தை முடித்து விட்டு, எனது சகோதரி செளம்யா வீட்டில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு எனது காருக்கு நடந்துபோய்க் கொண்டிருந்தேன். அந்த இடம் இருட்டாக இருந்தது. அப்போது திடீரென ஒரு ஆள் எங்கிருந்தோ வந்தார்.
ஆவேசமாக என்னைப் பார்த்து "ரெட் கார்ட் கொடுக்கறீங்களா.. .நீ சப்போர்ட் வேற" என்று கூறியபடி எனது முகத்தில் சரமாரியாக அடித்து விட்டு ஓடி விட்டார். நான் வலியால் துடித்தேன். முகம் வீங்கி விட்டது. அப்போது இரவு 1 மணியாகும். யாருமே அந்த இடத்தில் இல்லை. செளம்யாவுக்கு போன் செய்து கீழே வரச் சொன்னேன். அவர் உடனே போலீஸில் புகார் கொடுக்கக் கூறினார். எனக்கு நம்பிக்கை இல்லை என்று நான் கூறி விட்டேன்.
முதலுதவி மட்டும் எடுத்துக் கொண்டு கோபத்துடன் வீட்டுக்கு வந்து விட்டேன். தாக்கிய நபரின் முகம் அடையாளம் தெரியவில்லை. பைத்தியக்காரன் மாதிரி அந்த நபர் சிரித்தது எனது காதுகளில் இன்னும் கேட்கிறது. இப்போது ரெவ்யூ செய்யும் அளவுக்கு நான் தெம்பாக இல்லை. கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வனிதா.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}