சென்னை: அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் கூட்டணியில் புதிதாக ஒரு படம் உருவாகிறது. புரொடக்ஷன் நம்பர் 4 என்று இப்போதைக்குப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கவுள்ளார். அழகான காதல் கதையாக இது இருக்கும் என்று இயக்குநர் கூறியுள்ளார்.
மலையாள நடிகரான அர்ஜூன் தாஸ், 2012ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த கைதி படம் இவருக்கு மிகப் பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. லோகேஷ் கனகராஜின் பெருமை மிகு அறிமுகமாக உருவெடுத்த பின்னர் தமிழில் நல்ல நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். மாஸ்டர் படத்திலும் இவர் கலக்கலாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பும், இவரது குரலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்துள்ளது.
வில்லனாக நடித்து வரும் அர்ஜூன் தாஸ் சமீப காலமாக கதை நாயகனாகவும் மாற ஆரம்பித்திருக்கிறார். புதிய படம் ஒன்றில் அதிதி ஷங்கருடன் ஜோடி போட்டு நடிக்கவுள்ளார். மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேஷ் தயாரிக்கும் 4வது படத்தில் இந்த இருவரும் இணைகின்றனர். விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்குகிறார். இது இவருக்கு முதல் படமாகும்.
அதிதி ஷங்கரும் தமிழில் ஒரு நல்ல பிரேக்குக்காக காத்திருக்கிறார். கார்த்தியுடன் இணைந்து நடிகையாக அறிமுகமான அதிதி, சமீபத்தில்தான் அதர்வாவின் தம்பி ஆகாஷுடன் இணைந்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் அதிதி. இப்போது நடிப்பில் மிரட்டக் கூடியவரான அர்ஜூன் தாஸுடன் இணைந்திருப்பதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு அதிதி உயருவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது முதல் படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் கூறுகையில், இது காதல் மற்றும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம். அனைவருக்கும் பிடித்தாற் போல இருக்கும் என்று கூறியுள்ளார்.
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
{{comments.comment}}