சென்னை: நெல்லை நீதிமன்றத்தின் வாயிலில் பட்டப்பகலில் இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில், நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டி கொடூரக் கொலை செய்துள்ளது. கொலையாளிகள் போலீசார்கள், வக்கில்கள் முன்னிலையில் காரில் ஏறி தம்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அறிந்த பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
"எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல.
திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!
இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செய்திகளில் வந்தவை:
●சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு
●சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை
●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து.
"தனிப்பட்ட கொலைகள்" என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் மு.க.ஸ்டாலின் திமுக அரசு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது?
நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.
மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போட்டோஷூட்டிலும், மடைமாற்று அரசியலிலும் மட்டுமே செலுத்தும் கவனத்தை தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கை காப்பதிலும் செலுத்துமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் தவெக வழக்கு
ஆன்மீக நாட்டம்.. அம்மாவிடமிருந்து தொற்றிக் கொண்ட கலை.. கனவுகளுடன் கலக்கும் ராஜ் பிரணவ்!
Cooking Tips: முருங்கைக் கீரையில் துவையல் செய்து சாப்பிட்டுள்ளீர்களா.. அட சூப்பரா இருக்குமுங்க!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாயமான 4.54 கிலோ தங்கம்.. கோவில் துணை கமிஷனர் சஸ்பெண்ட்!
கேள்வி கேட்டதற்காக வழக்கறிஞரை போட்டுத் தாக்குவீர்களா.. விசிகவுக்கு அண்ணாமலை கண்டனம்
கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. பலியான சிறுவனின் தந்தை வழக்கு
உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் தங்கம் விலை.. அயர்ச்சியில் நடுத்தர வர்க்கத்தினர்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 08, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்
குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி
{{comments.comment}}