அதிமுக செயற்குழுக் கூட்டம் திடீர் ரத்து!

Apr 04, 2023,12:41 PM IST
சென்னை: அதிமுக செயற்குழுக் கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் அசேன் தலைமையில் கூடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் அவரது தேர்வு அமைந்தது. இதனால் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி கைக்கு வந்துள்ளது. இதை எடடப்பாடி தரப்பு தொடர்ந்து கொண்டாடி வருகிறது.



இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு தமிழ்மகன் அசேன் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள முதல் செயற்குழுக் கூட்டம் என்பதால் எடப்பாடி தரப்பு மிகப் பிரமாண்ட வரவேற்புக்கு திட்டமிட்டிருந்தனர். தற்போது கூட்டம் ரத்தாகியுள்ளதால் கொண்டாட்டங்களும் தள்ளிப் போயுள்ளன.




சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்