சேலம்: முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடிக்கடி சேலம் வருகிறார்கள். எத்தனை முறை வந்தாலும் சேலம் அதிமுகவின் கோட்டை தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கூறியதாவது:
திமுக ஆட்சியில் ஒரு துறையில் மட்டுமல்ல, பெரும்பான்மையான துறைகளில் அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழல் செய்கின்றனர். 2026ல் அதிமுக ஆட்சி அமைத்த பிறகு எந்தெந்த துறைகளில் எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும். வெள்ள நிவாரணம் குறித்து நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக அறிக்கை வெளியிட்டோம். சென்னையில் வெள்ள நீர் வேகமாக வடிந்தது. வேகமாக வெளியேற்றப்பட்டது. ஆனால், திமுக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் கொஞ்சம் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை.

திமுக கூட்டணி இன்றைக்கு வலிமையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்போது கம்யூனிஸ்ட் கட்சி என்னவாயிற்று .. கூட்டணி புகைச்சல் ஆரம்பித்துவிட்டது. அது போல் காங்கிரஸ் இருக்கிறது. திருச்சி வேலுச்சாமி திமுகவினர் போற்றுதலுக்குரிய பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும்போது, இப்படியே தொடர்ந்தால் நாங்களும் பேசுவோம் என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுகவிடம் கோரிக்கை வைத்து எச்சரிக்கை மணி அடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி இருக்குமா? இல்லையா? என்பது பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பான கூட்டணி அதிமுக அமைக்கும். பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெறுவோம். நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொது சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடந்து தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் 36,000 போராட்டங்கள் நடைபெற்றது. யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அதிமுக ஆட்சி அனுமதி வழங்கியது. எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் விரும்புவார்கள். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களுடைய கையில் தான் உள்ளது என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}