சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக தொகுதி பங்கீடு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த தொகுதி பங்கீடு குழுவை தொடர்ந்து அதிமுக பிரச்சார குழு மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற உள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கட்சிகளை இணைக்கலாமா..? அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது..? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம்.. போன்றவை குறித்த ஆலோசனை இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி கட்சிகள் குறித்தும், ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுகவினர் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகள் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். நேற்று காங்கிரஸுடன் முதல் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.
இதில் புதிய கட்சிகளை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பிரச்சார குழு மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற உள்ளன.
2019 தேர்தலின் போது பாஜகவுடன் அமைத்த கூட்டணியை விட்டு விலகுவதாக அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். அதேசமயம், அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் தொடர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அதிமுக கூட்டணிக்கு யாரெல்லாம் புதிதாக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் பேச்சுக்களின்போதுதான் அதிமுக கூட்டணி குறித்த ஒரு வடிவம் முழுமையாக கிடைக்கும்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}