விந்தியா டூ சிங்கமுத்து வரை அதிமுகவுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் குதித்த ஸ்டார் பேச்சாளர்கள்!

Mar 29, 2024,11:41 AM IST

சென்னை: அதிமுகவுக்கு ஆதரவளித்து அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் படை பிரச்சாரக் களத்தில் குதித்துள்ளது.


தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.  




ஒருபுறம் ஆளும் கட்சியான திமுக.. மறுபுறம் எதிர்க்கட்சியாக செயல்படும் அதிமுக.. மற்றொருபுறம் பாஜக .. என தமிழகத்தில் மும்முனை அரசியல்வாதிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இவர்களுடன் சேராமல் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துக் களம் கண்டுள்ளது. இதனால் தமிழ்நாடே தேர்தல் விழாக்கோலம் பூண்டுள்ளது.


இந்த நிலையில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் சினிமாவில் உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 


வழக்கமாகவே அதிமுகவில்தான் அதிக அளவிலான நடிகர் நடிகையருக்கு பிரச்சாரத்தில் அதிக வாய்ப்பு தருவார்கள். அந்த வகையில் இம்முறையும் பெரும் பட்டாளமே களம் இறங்கியுள்ளது. வைகை செல்வன், நாஞ்சில் பி.சி.அன்பழகன் தவிர்த்து  ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலி கான், சிங்க முத்து, கவிஞர் முத்துலிங்கம், ரெங்கநாதன், வையாபுரி, அருள்மணி, கஞ்சா கருப்பு, மனோஜ் குமார், பாத்திமா பாபு, குண்டு கல்யாணம், அனுமோகன் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் ஒன்றினைந்து, பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.




நடிகை விந்தியாவும் ஏற்கனவே அதிமுகவுக்கு ஆதரவளித்து  தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டுப் பாடியும், ஜாலியாக பேசியும் நடிகர் நடிகைகள் வாக்கு சேகரிப்பார்கள் என்பதாலும், அவர்களை வேடிக்கை பார்க்கவும் கூட்டும் என்பதாலும் எப்போதுமே இந்த ஸ்டார் பேச்சாளர்களுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்யும்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்