கோவா: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் தீபக் ஷர்மா, பெண் கால்பந்து வீராங்கனைகள் இருவரை குடிபோதையில் கன்னத்தில் ஓங்கி அடித்து துன்புறுத்தியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது.
இமாச்சல பிரதேச கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருப்பவர் தீபக் சர்மா. சமீபத்தில் இந்திய மகளிர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இரண்டு கால்பந்து வீராங்கனைகள் கோவாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கினார். அப்போது தீபக் சர்மா தங்களை உடல் ரீதியாக தாக்கியதாகவும், இதனால் காயமடைந்ததாகவும் பலக் வர்மா மற்றும் ரித்திகா தாக்கூர் ஆகிய இரண்டு கால்பந்து வீராங்கனைகள் கால்பந்து சம்மேளனத்தில் புகார் அளித்தனர். மேலும் எங்களைத் தாக்கும் போது தீபக் ஷர்மா மது போதையில் இருந்ததாகவும் கூறி இருந்தனர்.

இதுதொடர்பாக கோவா கால்பந்து சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கோவாவின் மம்புசா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீபக் சர்மாவிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாலக் வர்மா கூறுகையில், நான் வியாழக்கிழமை இரவு அறையில் முட்டைகளை பொறித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் ரித்திகாவும் உடன் இருந்தார். அப்போது தீபக் சர்மா அங்கு வந்தார். நல்ல குடிபோதையில் இருந்தார். அவர் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வந்தது முதலே வீராங்கனைகள் முன்புதான் குடிப்பார். எப்போதுமே குடிபோதையில்தான் இருப்பார்.
என்னிடமும், ரித்திகாவிடமும் கடுமையாக பேசினார். ஓங்கி எங்களை கன்னத்தில் அறைந்தார். உடல் ரீதியாகவும் தாக்கினார். எனக்கு அழுகையாக வந்தது. அங்கிருந்து வந்து விட்டேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு என்னால் சரியாக தூங்க முடியவில்லை. மனரீதியாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என கூறினார்.
தியாகத் தீ.. சிவகங்கை சீமையை கைப்பற்றியவர்.. இந்தியாவின் முதல் வீரமங்கை.. வேலு நாச்சியார்!
திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
ஆரூத்ரா தரிசனம் 2026.. மரகத நடராஜர் தரிசனம் குறித்து அறிவோம்!
அதிகரிக்கும் குடும்பப் பஞ்சாயத்துகள்.. விரிவடையுமா டிஎன்ஏ டெஸ்ட் கோரிக்கைகள்?
TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தலைவர் 173...மாஸாக வந்த சூப்பர் அப்டேட்...கொண்டாடும் ரசிகர்கள்
{{comments.comment}}