டெல்லி: யுபிஎஸ்சி தலைவராக இந்திய பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(UPSC )தலைவராக பதவி வகித்து வந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து, யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலின்படி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இந்திய பாதுகாப்பு துறையின் முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யுபிஎஸ்சி தலைவராக ஆறாண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தி அடையும் வரை பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யுபிஎஸ் தலைவராக நியமிக்கப்பட்ட அஜய்குமார், முன்னதாக கேரளா கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற குடிமைப்பணி அதிகாரியாகவும், 2019 முதல் 2022 வரை பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
{{comments.comment}}