தல அஜீத் வாங்கிய புது கார்.. ஷாலினி ஷேர் செய்த போட்டோ.. பார்க்கவே பயங்கரமா இருக்கு பாஸ்!

Sep 13, 2024,04:48 PM IST

சென்னை:   நடிகர் அஜித்குமார் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காருடன் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


நடிகர் அஜித்குமார் லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் வருகின்ற தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளி வரும் என்று தெரிகிறது.




அந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ  பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


நடிப்பெல்லாம் அஜீத்துக்கு 2வது பட்சம்தான். அதை விட முக்கியமாக கார், பைக்குள் மீது தீவிர காதல் கொண்டவர் நடிகர் அஜித். கார் ரேஸ், பைக் ரேஸ் ஓட்டுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார். மிகப்பெரிய கார் பிரியரான இவர் தனது வீட்டில் பல சொகுசு கார்களை வாங்கி குவித்து வைத்துள்ளார். சமீபத்தில் அஜித் பிறந்த நாளுக்கு அவரது மனைவி ஷாலினி டுகாட்டி வகை பைக் ஒன்றை வாக்கிக் கொடுத்திருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் ரூ.9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றினை வாங்கினார்.


இந்நிலையில், போர்ஷே ஜிடி 3 வகை கார் வாங்கியுள்ளார் அஜித். இந்த காரின் விலை சுமார் ரூ.4 கோடியாம். இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 விநாடிகளில் கடந்து விடுமாம். இந்த காரின் டாப் ஸ்பீடு 296 கிமீ. இந்த காருடன் நடிகர் அஜித் குமார் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷாலினி. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு லைக்குகளும், கமண்டுகளும் குவிந்து வருகின்றன. அத்துடன் அஜித் ரசிகர்கள் அந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்தும் டிரெண்ட் செய்தும்  வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்