சென்னை: அட்சயதிரிதியையை முன்னிட்டு நகை வாங்க கடைக்கு வந்த மக்களுக்கு காலையிலேயே 2 முறை ஷாக் கிடைத்தது. அதாவது அடுத்தடுத்து 2 முறை நகை விலை உயர்ந்தது.
ஒரே நாளில் அதுவும் காலையிலேயே 2 முறை நகை விலை உயர்ந்தது மக்களை அதிர வைத்தது. ஆனாலும் இன்று ஏதாவது வாங்கியாகணுமே என்று மக்கள் நகைக் கடைகளுக்குப் படையெடுத்தபடிதான் உள்ளனர்.
அட்சிய திரிதியை தினத்தன்று பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். நகை வாங்க முடியாதவர்கள் ஏதாவது பொருள் வாங்குவார்கள். அட்சிய திரிதியை இன்று காலை 4.17 மணிக்குத் தொடங்கி நாளை மதியம் 2.50 மணி வரை உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் நகை, பொருள் வாங்கினால் வீட்டில் செல்வம்பெருகும், வளம் பெருகும் என்பது ஐதீகம். அது மட்டுமல்லாமல் இன்று மேற்கொள்ளும் காரியங்களும் வெற்றி பெறும் என்று கூறப்படுவதால் மக்கள் இந்தத் தினத்தை முக்கியமாக கருதுகிறார்கள்.
இந்த நிலையில் நகை விலை இன்று அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து மக்களை அயர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலையில் முதலில் சவரனுக்கு ரூ. 360 உயர்ந்தது. அதன் பிறகு சில மணி நேரங்களில் மீண்டும் ரூ. 360 உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 53,640 ஆக உள்ளது. கிராம் தங்கம் ரூ. 6705 ஆக உள்ளது. வெள்ளி விலையும் ரூ. 1.30 உயர்ந்து ரூ. 90க்கு விற்பனையாகிறது.
விலை உயர்ந்தாலும் கூட நகைக் கடைகளில் கூட்டத்திற்குக் குறைவில்லை. மக்கள் மகிழ்ச்சியோடு நகைக் கடைகளை முற்றுகையிட்டு விரும்பிய நகைகளை, வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}